"அன்புவோட வாழும்போதும் உதயா-வ மறக்க முடியல!".. TikTok சுமதி எடுத்த திடீர் முடிவு! Video
முகப்பு > சினிமா செய்திகள்டிக்டாக் செயலி மூலம் பிரபலமானவர்கள் உதயா மற்றும் சுமதி தம்பதியர். ஆனால், விபத்து ஒன்றில் நடந்த உதயாவின் திடீர் மரணம் அனைவரையும் கதிகலங்கவைத்தது.

டிக்டாக்கில் முக்கியமான காதல் ஜோடி உதயா மற்றும் சுமதி. இந்தாண்டின் தொடக்கத்தில் ஒரு விபத்தில் உதயா மரணம் அடைந்தார். இதனால் கைம்பெண்ணாக ஆன சுமதியை அவரது பெற்றோரை கைவிட்ட நிலையிலும், சுமதியின் அத்தை(உதயாவின் தாயார்), அம்மாவாக முன்னின்று சுமதியை அன்புவுக்கு திருமணம் செய்துவைத்தது அனைவர் மத்தியிலும் பாராட்டைப் பெற்றது. அதன் பின்னர் சுமதி அன்புவுடன் வாழ்ந்து வந்த நிலையில் தற்போது அன்புவை பிரிவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அன்பு மற்றும் தமது அத்தையுடன் இணைந்து சுமதி வெளியிட்டுள்ள வீடியோவில் பேசிய சுமதி, “அண்மையில் நானும் அன்புவும் திருமணம் செய்துகொண்டது அனைவருக்கும் தெரியும். தம்பிக்காகவும் (குழந்தை) குடும்ப சூழ்நிலைக்காகவும் தான் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.
இருப்பினும் அன்புவை உதயாவின் இடத்தில் வைத்து இப்போது வரை என்னால் பார்க்க முடியவில்லை. உதயாவை நான் மறந்துவிடுவேன் என்று கூறப்படுவதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. உதயாவை கண்டிப்பாக மறக்க முடியாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
என் வாழ்க்கையில் இணைந்திருக்கும் அன்புவினுடைய வாழ்க்கையையும் பார்க்க வேண்டி இருக்கிறது. யாரும் இது பற்றி தவறாக பேசிக் கொண்டிருக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்களுடைய ஆதரவு எனக்கு வேண்டும். அன்பு எங்கள் குடும்பத்தின் எல்லா பொறுப்புகளையும் சரியாகவே பார்த்துக் கொண்டிருந்தார்.
எனினும் என்னால் உதயாவின் இடத்தில் உதயாவுக்கு அடுத்தபடியாக இன்னொருவரைப் பார்க்க முடியவில்லை என்பதால் நாங்கள் பிரிந்துவிடலாம் என்கிற முடிவை மனமொத்து எடுத்து இருக்கிறோம். அன்புவுக்கும் வேறொரு வாழ்க்கை இருக்கிறது. அன்புவோ, தான் காத்திருப்பதாக கூறுகிறார். எனினும் அவருடைய வாழ்க்கையை பாழாக்கி விடக் கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுக்கிறோம்.
இதன் பிறகு அன்புவுக்கு என்று தனி வாழ்க்கை இருக்கிறது. அதை அவர் வாழ வேண்டும். யாரும் இதுபற்றி தவறாகவோ, எதிர்மறையாகவோ ட்ரோல் செய்ய வேண்டாம். அவருடைய எதிர்கால வாழ்க்கையை கெடுத்து விட வேண்டாம். நானும் உதயாவின் மகனை நல்லபடியாக வளர்த்து வாழ்ந்து காட்டுகிறேன். முடிந்த அளவுக்கு தவறாக ட்ரோல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று சுமதி குறிப்பிட்டிருக்கிறார்.
இதேபோல் சுமதியின் அத்தை பேசும்போது, “ஒரு ஒன்றரை மாதங்கள் நாங்களும் காத்திருந்தோம். இது சரியாகிவிடும் என்று நினைத்தோம். ஆனாலும் சுமதியின் மனம் இதை ஏற்க மறுக்கிறது என்பதால் அவரின் போக்கிலேயே இதை விட்டுவிடுகிறோம். அன்புவை இழப்பது எங்களுக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது. எனினும் இது சுமதியின் வாழ்க்கை என்பதால் ஒரு அளவுக்கு மேல் திணிக்க கூடாது என்று நினைக்கிறோம். இப்படி ஒரு முடிவு எடுப்பது தவறாக இருந்தால் மன்னித்து விடுங்கள்!” என தெரிவித்துள்ளார்.
"அன்புவோட வாழும்போதும் உதயா-வ மறக்க முடியல!".. TIKTOK சுமதி எடுத்த திடீர் முடிவு! VIDEO வீடியோ