மனைவி கிருத்திகா 2-வது குற்றவாளி... பப்ஜி மதனுக்கு எதிரான 1600 பக்க பரபரப்பு குற்றச்சாட்டு!
முகப்பு > சினிமா செய்திகள்கடந்த ஜூன் 18-ஆம் தேதி ஆபாச வீடியோக்களை யூடியூப்பில் வெளியிட்டதற்காக பிரபல யூடியூபர் பப்ஜி மதன்கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்ட அவரை, போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரித்தனர். இதனை தொடர்ந்து மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஆனால் சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் ஆஜரான மதனும் கிருத்திகாவும் இந்த குண்டர் சட்டத்துக்கு எதிரான தங்களின் வாதங்களை முன்வைத்தனர்.
குறிப்பாக ஆன்லைனில் மதன் விளையாடி அப்லோடு செய்தது தடை செய்யபட்ட ஆன்லைன் விளையாட்டை அல்ல என்றும், அது கொரியா வெர்ஷன் தான் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இதனிடையே மனைவி கிருத்திகாவிடம், “நாம் வைத்திருப்பது 2-மே சொகுசு கார்கள்தான்.. சொகுசு கார் இல்லை என வெளியில் சொல்ல வேண்டாம்” என மதன் அட்வைஸ் செய்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் யூடியூபில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை பற்றிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, பப்ஜி மதன் மீது, கொரோனா கால ஊரடங்கில் உதவி செய்வதாக 2,848 பேரிடம் ரூ.2.89 கோடி பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டதுடன் 1,600 பக்க குற்றப்பத்திரிகையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்துள்ளது. அத்துடன் இந்த குற்றப்பத்திரிகையில் 2வது குற்றவாளியாக பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவும் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் இதுவரை, மதன் மீது 150 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், 32 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் போலீசார் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் குறிப்பிட பட்டுள்ளது.