www.garudabazaar.com

தளபதி விஜய் உறவினர் வீட்டில் கேட்கப்போகும் டும் டும் டும் ! - கல்யாண தேதி குறித்த தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் உறவினரும் 'மாஸ்டர்' பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகளுமான சினேகா பிரிட்டோவிற்கும், மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும் நடிகர் அதர்வாவின் சகோதரருமான ஆகாஷிற்கும் திருமணம் நிச்சயதார்த்தம் கடந்த வருடம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

மேலும் நிச்சயதார்த்தத்தில் தளபதி விஜய், அதர்வா உள்ளிட்டோர் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரலானது. இந்நிலையில் இருவருக்கும் திருமணம் நடைபெறும் தேதி மற்றும் இடம் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளது. சினேகா பிரிட்டோ மற்றும் ஆகாஷ் ஆகியோரின் திருமணம் வருகிற ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடைபெறவிருக்கிறதாம்.

 Thalapthy Vijay's niece Sneha Britto's Atharva Murali's brother Akash's marriage date and venue fixed | தளபதி விஜய்யின் உறவினர் சினேகா பிரிட்டோவின் திருமண நாள் மற்றும் இடம் குறித்த தகவல்

திருமணமானது சினேகா பிரிட்டோவின் வீட்டில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. நெருங்கிய உறவினரின் திருமணம் என்பதால் தளபதி விஜய் தனது குடும்பத்துடன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருமண நிகழ்வில் கலந்துகொள்ளும் தளபதி விஜய்யின் புகைப்படங்களை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

 Thalapthy Vijay's niece Sneha Britto's Atharva Murali's brother Akash's marriage date and venue fixed | தளபதி விஜய்யின் உறவினர் சினேகா பிரிட்டோவின் திருமண நாள் மற்றும் இடம் குறித்த தகவல்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Thalapthy Vijay's niece Sneha Britto's Atharva Murali's brother Akash's marriage date and venue fixed | தளபதி விஜய்யின் உறவினர் சினேகா பிரிட்டோவின் திருமண நாள

People looking for online information on Akash, Atharva, Sneha Britto, Vijay, Xavier Britto will find this news story useful.