Vilangu Others
www.garudabazaar.com

குழந்தையை கொஞ்சும் தளபதி விஜய்.. பீஸ்ட் அரபிக் குத்து பாட்டுடன் Trend ஆகும் வைரல் ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 18 பிப்ரவரி 2022: நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Thalapathy vijay with baby cute photo viral விஜய் Beast

அரபிக் குத்து

இசை அமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கும் இந்த பாடல் அரபிக் குத்து என்கிற பெயரில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பாடலில் ஹலமதி ஹபிபோ என்கிற வரிகள் மிகவும் பிரபலமானது. அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி இணைந்து இந்த பாடலை பாடி இருக்கிறார்கள். நடிகர் சிவகார்த்திகேயன் இந்த பாடல் வரிகள் எழுதியிருக்கிறார்.

Thalapathy vijay with baby cute photo viral விஜய் Beast

புரோமோ

முன்னதாக இந்த பாடலுக்கான வைரல் புரோமோ ஒன்று வெளியாகியிருந்தது. இந்த புரோமோவில் இந்த திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார், இசை அமைப்பாளர் அனிருத் மற்றும் இந்த படத்தில் இந்த பாடல் எழுதி இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர். ஜாலியான முறையில் இந்த பாடலுக்கான புரோமோ அமைந்திருந்தது.

Thalapathy vijay with baby cute photo viral விஜய் Beast

இதனைத் தொடர்ந்து இந்த பாடல் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகியது. பாடல் வெளியான ஓரிரு நாட்களில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கான பார்வையாளர்களைத் தாண்டி, ரெக்கார்டு பிரேக்கிங் சாதனைகளை, இந்த பாடல் படைத்து வருகிறது.

ரிலீஸ் மற்றும் டான்ஸ்

இதனிடையே இதே பாடலுக்கு ரசிகர்கள் பலரும் ரிலீஸ் மற்றும் டான்ஸ் முயற்சிசெய்து தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் பீஸ்ட் ஃபீவரில் இருந்த அனைவருமே தற்போது பீஸ்ட் மோடுக்கு மாறி இருக்கின்றனர். ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலகினரும் இவற்றை முயற்சி செய்து பீஸ்ட் மோடுக்கு மாறி இருக்கின்றனர்.

அனிருத்..

Thalapathy vijay with baby cute photo viral விஜய் Beast

அதன்படி , பட்டிதொட்டியெங்கும் ஒலித்து வரும், இந்த பீஸ்ட் பட பாடலுக்கு இசையமைத்த அனிருத்தே இந்த பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். அதில், ஐந்து டேக் எடுத்தும் டான்ஸ் ஸ்டெப் ஒழுங்காக வரவில்லை என்று காமெடியாக பதிவு செய்திருக்கிறார். இதேபோல் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் மகன் ஆத்விக், இதே பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோவை நெல்சனின் மனைவி பதிவிட, பலரும் அந்த வீடியோவை பகிர்ந்தும் பாராட்டியும் வருகின்றனர்.

குழந்தையுடன் நடிகர் விஜய்

இந்நிலையில் நடிகர் விஜய், தம்முடைய கையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு இருக்கும் ஒரு அரிய புகைப்படம் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை தளபதி விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதிவிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் இது யாருடைய குழந்தை என்று தொடர்ச்சியாக கேட்டு வருகின்றனர்.

Thalapathy vijay with baby cute photo viral விஜய் Beast

கையில் குழந்தையுடன், குழந்தையை கொஞ்சி மகிழும் விஜய்யின் இந்த புகைப்படம் ரசிகர்களிடத்தில் தீயாய் பரவி வருகிறது.

Also Read: சமந்தா Airport-ல வெச்சு அரபிக்குத்து பாட்டுக்கு செம Dance .. அதுவும் பீஸ்ட் மோடுல.. தெறி வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy vijay with baby cute photo viral விஜய் Beast

People looking for online information on Actor Vijay, Beast Arabic Kuthu, Beast first single, Thalapathy, Thalapathy vijay with baby cute photo viral, ThalapathyVijay will find this news story useful.