அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களை தெறிக்கவிட்ட நிலையில், உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்புக்கு இடையே இரண்டாவது லுக் வெளியாகியுள்ளது.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
மகளிர் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் விஜய் நடிக்கிறார். இதில் மகன் விஜய் பெயர் பிகில் எனவும், நயன்தாராவின் பெயர் ஏஞ்சல் என கூறப்பட்ட நிலையில், இதில் அப்பாவாக நடித்துள்ள விஜய்யின் பெயர் ‘ராயப்பன்’ என நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அப்பா விஜய் பட்டா கத்தியுடனும், மகன் விஜய் கால்பந்து வீரர் லுக்கிலும் தோன்றினர். இந்நிலையில், இரண்டாவது லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி இன்று (ஜூன்.22) நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகிறது. பிகில் என்றால் சென்னை வட்டார வழக்கில் விசில் என்ற அர்த்தம். அந்த வகையில் ஃபர்ஸ்ட் லுக் போச்டரில், பிகிலாக நடித்துள்ள விஜய் தனது மகளிர் கால்பந்து டீமுடன் இருப்பார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.
பிகிலின் கால்பந்து அணியில், நடிகைகள் இந்துஜா, ரெபா மோனிகா, அம்ரிதா, நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.
MASS-BREAKING: பிகிலு அப்பா யாரு? பேரு என்ன தெரியுமா? வீடியோ