ரஜினிகாந்த் மேடையில் பேசிய பஞ்ச் - ''முதல அத பண்ண சொல்லுங்க அப்போ நான் வரேன்''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் ரஜினி மக்கள் மன்றம் மாவட்ட செயலாளர்களை சமீபத்தில் சந்தித்து பேசினார். இந்த தகவல்கள் அரசியல் வட்டத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் செய்தியாளர்களை இன்று (மார்ச் 12) ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் சந்தித்து பேசுவார் என்று அறிவிக்கப்பட்டது.

தலைவர் ரஜினிகாந்த் அரசியல் என்ட்ரி குறித்து கருத்து | Thalaivar Rajinikanth Speaks about his Political entry

இதனையடுத்து ரஜினி கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''2017-ம் ஆண்டிற்கு முன்பு நான் அரசியலுக்கு வருவேன் என்று கூறியதில்லை. எனவே, 26 ஆண்டுகளாக ரஜின அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார் என்று கூறுவது தவறு. 2017 டிசம்பரில் தான் நான் அரசியலுக்கு வருவதாகக் கூறினேன்.

என்னை முதலமைச்சர் வேட்பாளராக நினைத்து பார்க்க முடியவில்லை. ஆட்சி பொறுப்பு வேற கட்சி பொறுப்பு வேற. நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க நான் ஒரு பாலமாக இருப்பேன். வாக்குகளை பிரிக்க நான் வரவில்லை. மக்கள் ஒரு மாற்றத்தை கொண்டுவர தயாராக வேண்டும்.

வருங்கால அமைச்சர், வருங்கால முதல்வர் இத சொல்றத நிறுத்துங்க. நான் ஒரு துரும்புதான். நாம எதிர்க்கிறது ரெண்டு ஜாம்பாவன்கள்,  அசுர பலத்துடன் இருக்கிறார்கள். ஆட்சி நம்ம ரசிகர்கள வச்சுட்டு ஜெய்க்க முடியுமா ? ஓட்டை பிரிக்கதான் முடியும்.

கட்சியின் கொள்கைகள் குறித்து இப்போதே ஏன் ரஜினி சொல்கிறார் என்று நினைக்கலாம். ஆனால், வெளிப்படைத்தன்மை மிக அவசியம்.

இந்த விஷயங்களை எல்லாம் தமிழக மக்கள் ஒவ்வொருவரிடமும் கொண்டு சேருங்கள். தமிழக மூலை முடுக்கெல்லாம் இந்த விஷயம் சென்று சேரவேண்டும். மக்கள் மனதில் ஒரு மாற்றம் வரவேண்டும். அப்போ நான் வரேன். '' என்று தெரிவித்தார்.

Entertainment sub editor