#27YearsOfThalaAjith - Social Media-வில் கெத்து காட்டும் தல ரசிகர்கள்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 02, 2019 09:55 PM
நடிகர் அஜித்குமார் திரையுலகில் அறிமுகமாகி 27 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இயக்குநர் செல்வா இயக்கத்தில் கடந்த 1993ம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் அஜித்குமார். ரசிகர்களால் தல அஜித் என்று அன்போடு அழைக்கப்படும் அஜித், திரையுலகில் தனது 27 ஆண்டுகளை கடந்துள்ளார்.
தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள அஜித், ரசிகர்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தன்னுடைய ரசிகர் மன்றங்களை கலைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், திரையுலகில் அஜித் 27 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், அதனை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் #27YrsOfEpitomeThalaAJITH என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வரும் ஆக.8ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது. சமூகத்தில் பெண்களுக்கு நேரும் பாலியல் தொந்திரவுகளை மையப்படுத்திய இப்படத்தில் அஜித் போன்ற முன்னணி நடிகர் நடித்திருப்பது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் இடையும் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.