www.garudabazaar.com

மீண்டும் வெளியாகிறதா மங்காத்தா? இயக்குனர் வெங்கட்பிரபுவின் சுவாரஸ்யமான பதில்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித்தின் 50 வது படமாக  2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரம்ஜானை முன்னிட்டு, வெங்கட் பிரபு இயக்கத்தில் , யுவன் சங்கர் ராஜா இசையில், தல அஜித், அர்ஜுன், த்ரிஷா, ராய் லட்சுமி, பிரேம் ஜி, அஞ்சலி, ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான படம் ’மங்காத்தா’.

Thala Ajithkumar Blockbuster Mankatha Movie Re Release

கிளவுட் நைன் மூவிஸ் சார்பில் தயாநிதி அழகிரி தயாரித்து, சன் பிக்சர்ஸ் நிறுவனமும், ராதிகா சரத்குமாரின் ரேடான் நிறுவனமும் இணைந்து இப்படத்தை வெளியிட்டது. 

Thala Ajithkumar Blockbuster Mankatha Movie Re Release

இந்த படத்தில் தல அஜித் வில்லனாக நடித்து ரசிகர்களையும், விமர்சகர்களையும் பாராட்ட வைத்திருந்தார். தமிழ் சினிமாவில் இந்த படம் டிரெண்ட் செட்டர் ஆனது. வசூலிலும் மிகப்பெரிய சாதனை படைத்தது.  இந்த படம் வெளிவந்து வரும் ஆகஸ்ட் 31ல் 10 வருடங்கள் ஆகிறது. இதனை முன்னிட்டு ரசிகர்கள் இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய கோரிக்கை வைத்து வருகின்றனர். 

Thala Ajithkumar Blockbuster Mankatha Movie Re Release

ரசிகர்களின் கோரிக்கைக்கு இயக்குனர் வெங்கட்பிரபு பதில் அளித்துள்ளார். அதில் அவர் படத்தின் வெளியீடு சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருப்பதாகவும், எனக்கும் ஆசை தான்! அவர்கள் மனது வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

 

Thala Ajithkumar Blockbuster Mankatha Movie Re Release

People looking for online information on Ajith Kumar, Mankatha, Trisha, Venkat Prabhu, Yuvan Shankar Raja will find this news story useful.