Annatha Others ua
Jai been others
www.garudabazaar.com

ஆஹா! தல.. தல தான்! மோகன்லாலுடன் அஜித்குமார்! வைரலாகும் சூப்பர் BTS வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், வலிமை படம் உருவாகி உள்ளது.

Surprise Visit Of Thala Ajith Kumar On The Set Of Marakkar

வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் முழுவீச்சாக நடந்து வருகிறது. இந்த படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதனையொட்டி வலிமை படத்தின் முன்னோட்டம் (Glimpse of Valimai) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Surprise Visit Of Thala Ajith Kumar On The Set Of Marakkar

இந்நிலையில் தல அஜித் 2019 ஆம் ஆண்டு ஐத்ராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பின் போது, படப்பிடிப்பிற்கு நடுவே மரக்கார் படத்தின் படக்குழுவினரை சந்தித்தார். அப்போது அந்த புகைப்படங்கள் வைரலாக பரவின. அந்த புகைப்படத்தில் தேசிய விருது வென்ற இயக்குனர் பிரியதர்ஷன் உடன் அஜித் இருந்தார். 

Surprise Visit Of Thala Ajith Kumar On The Set Of Marakkar

அப்போதே அஜித் - மோகன்லால் இருக்கும் புகைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு அஜித் - மோகன்லாலுடன் இருக்கும் புதிய BTS வீடியோவை மரக்கார் படக்குழு யூடியூப்பில் வெளியிட்டுள்ளது. 67 வது தேசிய விருது விழாவில் இந்த படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது.

Surprise Visit Of Thala Ajith Kumar On The Set Of Marakkar

விரைவில் இந்த படம் திரைக்கு வருகிறது, இந்த படம் மலையாள சினிமாவில் அதிகபட்சமாக 100 கோடி ரூபாய் செலவில் உருவாகி உள்ளது.

ஆஹா! தல.. தல தான்! மோகன்லாலுடன் அஜித்குமார்! வைரலாகும் சூப்பர் BTS வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Surprise Visit Of Thala Ajith Kumar On The Set Of Marakkar

People looking for online information on Ajith Kumar, Mohan Lal, Priyadharshan, Thala will find this news story useful.