SK20 பட தயாரிப்பாளர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்.. சிவகார்த்திகேயனின் உருக்கமான Post
முகப்பு > சினிமா செய்திகள்தெலுங்கானா : பிரபல தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் மரணமடைந்துள்ளார்.

Also Read | தனுஷ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் புதிய படம்.. BTS புகைப்படங்களுடன் வெளியான LATEST அப்டேட்
மூத்த தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான நாராயண் தாஸ் நரங் இன்று ஏப்ரல் 19 அன்று ஹைதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 76. மெகாஸ்டார் சிரஞ்சீவி, சுதீர் பாபு, சிவகார்த்திகேயன், மகேஷ்பாபு உள்ளிட்ட பிரபலங்கள் ட்விட்டரில் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச் சடங்குகள் இன்று (ஏப்ரல் 19) மாலை 4 மணிக்கு ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. அவர் தனது மகனும் தயாரிப்பாளருமான சுனில் நரங்குடன் வசித்து வந்தார்.
தற்போது நாராயண் தாஸ் நரங் தயாரிக்கும் SK20 படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அவருடன் எடுத்த ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு, "எங்கள் அன்பான தயாரிப்பாளர் ஸ்ரீ நாராயண் தாஸ் நரங் சாரின் மறைவைக் கேட்டு ஆழ்ந்த வருத்தமடைகிறேன். சுனில் சார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள், அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" என ட்வீட் செய்துள்ளார்.
தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நிதியாளர் ஆக மட்டுமல்லாமல் ஆசிய குழுமம் & குளோபல் சினிமாஸ் தலைவர், தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் ஆகிய பதவிகளை வகித்தவர்.
Also Read | ஆஹா.. "விக்ரம்" படத்திற்காக இதுவரை இல்லாத அளவுக்கு வேற மாரி சம்பவம்.. வெளியான சூப்பர் தகவல்