நடிகர் T ராஜேந்தருக்கு வெளிநாட்டில் சிகிச்சை… நடிகர் சிம்பு வெளியிட்ட அறிக்கை
முகப்பு > சினிமா செய்திகள்உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த டி ராஜேந்தர் உயர் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லப்பட உள்ளார்.
பல்துறை வித்தகர் T ராஜேந்தர்..
தமிழ் சினிமாவின் மூத்த கலைஞர்களில் ஒருவரான T. ராஜேந்தர் வெற்றிகரமான இயக்குனர். நடிகர், பின்னணிப் பாடகர், நடனக் கலைஞர் மற்றும் வசனகர்த்தா, பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு மேலாளர் மற்றும் தயாரிப்பாளர் என பல துறைகளில் செயல்பட்டவர். 1980 களில், அவரது அனைத்து திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தவை. பெரும்பாலும் அவரது படங்களில் அவரே கதாநாயகனாக நடித்தார். அவரால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகர்கள் பலர் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வந்துள்ளனர். நடிகைகள் அமலா, நளினி, ஜோதி, ஜீவிதா மற்றும் மும்தாஜ் உள்ளிட்டோரை அவர்தான் தனது படங்களில் அறிமுகப்படுத்தினா. இன்று தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகனாக இருக்கும் அவரின் மகன் சிம்புவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தியதும் அவர்தான்.
மருத்துவமனையில் அனுமதி…
இந்நிலையில் டி.ராஜேந்தர் சில நாட்களுக்கு முன்னதாக சென்னை போருரில் உள்ள தனியார் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் நேற்று வெளியாகின. கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவரை போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சிம்பு வெளியிட்ட அறிக்கை…
இதையடுத்து தற்போது அவர் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லப்பட உள்ளதாக அவரது மகன் நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் “எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும் வணக்கம், எனது தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில் அவருக்கு வயிற்றில் சிறிய இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல்நலன் கருதியும் உயர் சிகிச்சைக்காவும், இப்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன் நலமாக உள்ளார்.கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிராத்தனைக்கும் அனைவரின் அன்புக்கும் நன்றி” என்று கூறியுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் பலரும் டி ராஜேந்தர் விரைவில் குணமாகி வரவேண்டும் என்று நம்பிக்கை வார்த்தைகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Film Maker Silmbarasan TR Father Vijaya T. Rajendar Hospitalized
- Simbu Talked About Marudhanayagam In Kamal Haasan's Vikram Audio Launch
- Simbu Talked About Marudhanayagam In Vikram Audio Launch
- Simbu Hansika Maha Movie Release Date Announced
- Simbu Hansika Maha Movie Release Date Announced
- Simbu Sung The VTK First Single Kaalathukkum Nee Venum
- Simbu Gautham Menon ARR VTK First Single Update
- Simbu Next Movie Pathu Thala Shoot Update Reports
- Simbu Next Movie Pathu Thala Shoot Update Reports
- Simbu Aka STR's New Cute Video About Tamil OTT Aha
- Simbu New Video About Aha Ott In Tamil
- Simbu And Anirudh Viral Tweets As Tamilconnects
தொடர்புடைய இணைப்புகள்
- "15 வருஷம் ஆச்சு நான் இத பண்ணி..." கடுப்பான Sreenidhi
- "என்னையும் Simbu-வையும் சேத்து வைங்க” Emotional ஆன Sreenidhi
- எல்லாரும் இந்த Step போடுங்க 😍 KPY BALA போட்ட குத்தாட்டம் 🕺🕺 களைகட்டிய Vj Akalya Reception
- പെൺസുഹൃത്തിനെ കാണാനെത്തിയ പ്ലസ്സ് 2 വിദ്യാർത്ഥിയെ വീട്ടിൽകയറ്റി മർദ്ദിച്ച് സുഹൃത്തിന്റെ
- തന്റെ കുഞ്ഞ് നായ്കുട്ടിയുമായി ആശുപത്രിയി വരാന്തയിൽ കാത്തു നിൽക്കുന്ന ബാലൻ.
- 'அதிரவைத்த கிட்னி மோசடி'.. மாஸ்டர் பிளான் போட்ட 15 பேர் கொண்ட கும்பல்! வசமாக சிக்கிய பின்னணி
- TRAFFIC-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்.. உயிருக்குப் போராடிய நோயாளி..! REAL ஹீரோவாக மாறிய சாமானியன்
- "இந்த ஊர் கும்பிடும், குல சாமி இவன்.. Ambulance-ல் துடித்த உயிர்.. இளைஞர் செய்த நெகிழ்ச்சி..!
- NELSON-ஓட வேட்டை மன்னன் 🔥 வேற மாரி - Arunraja Kamaraj
- STR 😍 SJ Suryah 🔥 Mass Dailouge - Simbu Fan | Teju
- KPY Bala-க்கு Poonam Bajwa கொடுத்த Surprise 😍🔥வெறித்தனமான Fan Boy Moment ❤️🥳
- "சர்க்கரை நோயை குணப்படுத்த முடியுமா? " Leela Specialty Doctors சிறப்பு பேட்டி