அதிர்ச்சி!!! பிரபல 'வெண்ணிலா கபடிக்குழு' நடிகர் திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்..
முகப்பு > சினிமா செய்திகள்2009 ஆம் ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் வெண்ணிலா கபடிகுழு.

விஷ்ணு விஷால் நாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் அவருடன் அப்புகுட்டி, பரோட்டா முரளி, விஜய் சேதுபதி, சரண்யா மோகன், சூரி உட்பட பலர் நடித்து இருந்தார்கள். மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்த இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் ஹரி வைரவன். இவர் இந்த படத்தை தொடர்ந்து குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன் 15 நாட்கள் கோமாவில் இருந்த அவர் மெல்ல அதில் இருந்து மீண்டார். அவருக்கு ஏற்கனவே சர்க்கரை வியாதி இருந்ததால் கை, கால் வீங்கியது. இதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஹரி வைரவன் இன்று நடு இரவில் 12.30 மணியளவில் மரணம் அடைந்துள்ளார்.
இது குறித்து நடிகர் அம்பானி சங்கர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "வெண்ணிலா கபடி குழு திரைப்படப்புகழ் நடிகர் "ஹரி வைரவன் " 3.12.22 இன்று காலை 12.15 மணியளவில் இறைவனடி சேர்ந்தார். ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
மதுரையை சார்ந்த ஹரி வைரவன் மரணம் ரசிகர்கள் & சக நடிகர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது இறுதி சடங்கு இன்று மதுரையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.