www.garudabazaar.com

சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'கங்குவா'.. ரிலீஸ் எப்போ? தெறி அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

SURIYA 42 Kanguva Movie Official Release Update

தற்போது சூர்யா,   சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  சிறுத்தை சிவா திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக வெற்றி பழனிச்சாமி பணிபுரிகிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிகிறார். வசனங்களை மதன் கார்க்கி எழுதி உள்ளார்.

இப்படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணிபுரிய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சுப்ரீம் சுந்தர் சண்டை காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மிலன் கலை இயக்குனராக பணிபுரிகிறார். எடிட்டராக நிஷாத் யூசுப் பணிபுரிகிறார்.

இந்த படம் 10 மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் முப்பரிமாண முறையில் 3டி தொழில்நுட்பத்தில் இந்த படம் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஒரு வலிமைமிக்க வீரம் மிக்க கதை' என்ற வாசகத்துடன் மோஷன் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.

SURIYA 42 Kanguva Movie Official Release Update

இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு இன்று அதிகாரப்பூர்வமாக கங்குவா என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் வரும் 2024 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் (ஜனவரி முதல் மார்ச் இடைப்பட்ட காலத்தில்) வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனிமேஷன் வீடியோ வடிவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

SURIYA 42 Kanguva Movie Official Release Update

People looking for online information on Kanguva, Suriya, Suriya42 will find this news story useful.