#BREAKING: பாலா படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடமா? ஜோதிகா character பற்றி Exciting தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா நடிப்பில் பாலா இயக்கும் படம் பற்றி சில பிரத்யேகமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

Suriya 41 movie jyothika character breaking information

Also Read | BREAKING: அமெரிக்கா செல்கிறாரா சூப்பர் ஸ்டார்?... எப்போது? – வெளியான லேட்டஸ்ட் தகவல்!

சூர்யா - பாலா படங்கள்…

சூர்யாவின் ஆரம்பகால திரையுலக வாழ்வில் அவருக்கு முக்கியமான படங்களாக அமைந்தவை பாலாவின் நந்தாவும், பிதாமகனும், இந்த இரு படங்களிலும் தன் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் சூர்யா. அது ரசிகர்களிடம் பரவலாக பாராட்டுகளைப் பெற்றது. நந்தாவில் கோபமான முரட்டு இளைஞன் வேடம் என்றால் பிதாமகனில். நந்தாவுக்கு நேர் எதிரான நகைச்சுவை ததும்பும் பாத்திரத்தில் இந்த படத்தில் சூர்யாவை நடிக்க வைத்து அவரின் மற்றொரு பரிணாமத்தை வெளிக்கொண்டு வந்தார் பாலா. இடையில் பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் சூர்யா ஒரு கௌரவ வேடத்திலும் நடித்திருந்தார்.

Suriya 41 movie jyothika character breaking information

சூர்யா 41 அறிவிப்பு…

இயக்குநர் பாலா இயக்கத்தில் கடைசியாக ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் திரையரங்கில் வெளியான நாச்சியார் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படத்தை பாலா இயக்க உள்ளார்.  இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இசையமைப்பாளராக ஜி வி பிரகாஷும், ஒளிப்பதிவாளராக பாலசுப்ரமணியமும் பணியாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் விறுவிறுப்பாக நடந்து வந்தது.

Suriya 41 movie jyothika character breaking information

கன்னியாகுமரியில் ஷூட்டிங்…

இதையடுத்து அங்கு படப்பிடிப்பு முடிந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் “கன்னியாகுமரியில் 34 நாட்கள் நடந்த 1வது ஷெட்யூல் வெற்றிகரமாக முடிந்த பிறகு, அடுத்த 15 நாட்கள் ஷெட்யூல் விரிவான செட் வேலைகளுக்குப் பிறகு ஜூன் மாதம் தொடங்குகிறது” என்று அறிவித்திருந்தனர்.

சூர்யா 41 புதிய தகவல்…

இந்நிலையில் தற்போது இந்த படத்தை பற்றிய சில லேட்டஸ்ட் தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் படி படத்தில் சூர்யா அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் நடிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதில் அப்பா வேடத்தில் நடிக்கும் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க உள்ளதாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யா- ஜோதிகா இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர். இதற்கு முன்பாக இருவரும் சேர்ந்து நடித்த கடைசி படமாக ‘ஜில்லுனு ஒரு காதல்’ திரைப்படம் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுபற்றிய அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Suriya 41 movie jyothika character breaking information

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

#BREAKING: பாலா படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடமா? ஜோதிகா CHARACTER பற்றி EXCITING தகவல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Suriya 41 movie jyothika character breaking information

People looking for online information on சூர்யா, ஜோதிகா, பாலா, Director Bala, Jyothika, Suriya 41 movie will find this news story useful.