www.garudabazaar.com

2D தயாரிப்பில்.. சசிகுமார் & ஜோதிகாவின் ‘உடன்பிறப்பே’.. வந்தாச்சு ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் சூர்யா நடித்த 'சூரரை போற்று' மற்றும் ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்' ஆகிய படங்கள் அமேசான் ப்ரைமில் வெளியாகின.

Suriya 2D entertainment jyothika udanpirappe release date

இந்த படங்களின் வரவேற்பைத் தொடர்ந்து சூர்யா மற்றும் ஜோதிகாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் 4 படங்கள் நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் அடுத்தடுத்து வெளியாகி வருன்றன. அதன்படி 'ஜெய்பீம்', 'உடன்பிறப்பே', 'ஓ மை டாக்' மற்றும் 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்' ஆகிய 4 படங்கள் இந்த ரிலீஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இதில், கடந்த 2021, செப்டம்பர் 24-ஆம் தேதி தான், 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' படம் அமேசான் ப்ரைமில் ரிலீஸ் ஆனது. பிள்ளை போல் வளர்த்த மாட்டை யாரோ களவாடிக்கொண்டு போக, அதனால் கஷ்டப்படும் எளிய விவசாய குடும்பத்தின் கதையை நையாண்டி - நகைச்சுவை கலந்து இந்த படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம், வடிவேல் முருகன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் அரிசில் மூர்த்தி இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த வரிசையில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் தான் உடன்பிறப்பே. சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், நிவேதிதா சதீஷ் மற்றும் சித்து ஆகியோர் நடிப்பில், ஃபேமிலி டிராமா ஜானரில் தயாராகியுள்ள 'உடன்பிறப்பே' என்கிற இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி வரும் 2021 அக்டோபர் 14-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் இப்படம் வெளியாகிறது.‘கத்துக்குட்டி’ படத்தை இயக்கிய இரா.சரவணன் இயக்கியுள்ள இந்த படம் ஜோதிகாவுக்கு 50வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து கர்ணன் பட நாயகி ரெஜிஷா விஜயன் நடிக்க, சூர்யா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படம் நவம்பர் 2021-ல் அமேசான் ப்ரைமில் ரிலீஸ் ஆகிறது. த.செ.ஞானவேல் இயக்கிய ‘ஜெய் பீம்’ படம் பழங்குடியின தம்பதியரின் வாழ்வியலை பேசும் ஒரு க்ரைம் திரில்லர் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya 2D entertainment jyothika udanpirappe release date

People looking for online information on 2D Entertainment, Amazon Prime Video, Jyothika, M Sasikumar, Raame Aandalum Raavane Aandalum, Rajisha Vijayan, Suriya will find this news story useful.