www.garudabazaar.com

சூர்யா தயாரித்த 4 படங்கள்!!. அடுத்தடுத்து அமேசானில் ரிலீஸ்!! இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

முன்னதாக 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் சூர்யா நடித்த 'சூரரை போற்று' மற்றும் ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்' ஆகிய படங்கள் அமேசான் ப்ரைமில் வெளியாகி வரவேற்பை பெற்றன.

Suriya 2D entertainment 4 movies amazon OTT release massive

இந்நிலையில் அடுத்த 4 நான்கு மாதங்களில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் 4 படங்கள் நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் அடுத்தடுத்து வெளியாகின்றன. இது தொடர்பாக 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் அமேசான் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதாக அந்நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

இந்த ரிலீஸ் பட்டியலில், 'ஜெய்பீம்', 'உடன்பிறப்பே', 'ஓ மை டாக்' மற்றும் 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்' ஆகிய 4 படங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில், த.செ.ஞானவேல் இயக்கிய ‘ஜெய் பீம்’ படம் ஒரு க்ரைம் திரில்லர் திரைப்படம். பழங்குடியின தம்பதியரின் வாழ்வியலை பேசும் இந்த படத்தில் கர்ணன் பட நாயகி ரெஜிஷா விஜயன் நடிக்க, சூர்யா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் நவம்பர் 2021-ல் அமேசான் ப்ரைமில் ரிலீஸ் ஆகிறது. 

இதனை அடுத்து சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், நிவேதிதா சதீஷ் மற்றும் சித்து ஆகியோர் நடிப்பில், ஃபேமிலி டிராமா ஜானரில் தயாரான 'உடன்பிறப்பே' என்கிற படம் இந்த பட்டியலில் உள்ளது. இயக்குனர் இரா.சரவணன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் அக்டோபர் 2021-ல் அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. 

இந்த பட்டியலில், அருண் விஜய், அர்ணவ் விஜய் (அருண் விஜயின் மகன்), விஜயகுமார், மகிமா நம்பியார் மற்றும் வினை ராய் நடித்த குழந்தைகளை மையப்படுத்திய  ‘ஓ மை டாக்’ என்கிற படமும் இடம்பெற்றிருக்கிறது. அறிமுக இயக்குனர் சரோவ் சண்முகம் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் டிசம்பர் 2021-ல் அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. 

இதேபோல், ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம், வடிவேல் முருகன் உள்ளிட்ட பலர் நடித்த நையாண்டி நகைச்சுவையை மையப்படுத்திய 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்' என்ற படமும் இப்பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது. இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கிய இந்த படம் ஒரு நகைச்சுவைத் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் செப்டம்பர் 2021-ல் ரிலீஸ் ஆகிறது. 

அமேசான் ப்ரைம் வீடியோ சமீபத்திய திரைப்படங்கள், பிரத்யேக திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்டப் காமெடி, அமேசான் ஒரிஜினல்ஸ், விளம்பரம் இல்லாமல் இசையை கேட்பதற்கான அமேசான் ப்ரைம் மியூசிக்.. இவற்றையெல்லாம் இலவசமாகவும், விரைவாகவும் வழங்குவதற்கான வினியோக கட்டமைப்பு, புதிய பார்வையாளர்களை சென்றடைவதில் எளிதான அணுகுமுறை ஆகியவற்றை நம்ப முடியாத வகையில் வழங்கிவருகிறது.

இதனிடையே சிறந்த ஒப்பந்தங்கள், புதிய தொடக்கங்கள், வரம்பற்ற வாசிப்பை கொண்ட ப்ரைம் ரீடிங், இலவச விளையாட்டு உள்ளடக்கம் இவற்றுடன் கேமிங் வித் ப்ரைம் மூலம் ஏராளமான பலன்கள்.. இவை அனைத்தும் ரூ.999/- ரூபாய் செலுத்தி ஆண்டு உறுப்பினராக பதிவு செய்து கொள்பவர்களுக்கு அமேசான் வழங்கிவருகிறது. இந்த சந்தா செலுத்துவதன் மூலம் மேற்கண்ட சேவைகளை வாடிக்கையாளர் அல்லது சந்தாதாரர் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "சீரியல் நடிகையுடன் engagement-ஆ?".. பாக்கியலட்சுமி நடிகர் பகிர்ந்த Photo.. அந்த இன்னொரு கை யாரோடது?

Suriya 2D entertainment 4 movies amazon OTT release massive

People looking for online information on 2D Entertainment, Amazon Prime Video, Arun Vijay, Jai Bhim, Jyothika, M Sasikumar, Oh, Oh My Dog, Raman Aandalum Ravanan Aandalum, Ramya Pandian, Sasikumar, Suriya, Udanpirappe will find this news story useful.