சூப்பர் ஸ்டாரின் 'தர்பார்' படத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 17, 2019 08:57 PM
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'தர்பார்' படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். 'தளபதி' படத்துக்கு பிறகு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்துள்ளார். இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகிபாபு, நிவேதா தாமஸ், ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் சேட்டிலைட் ரைட்ஸை சன் டிவி பெற்றுள்ளது.
Tags : Darbar, Rajinikanth, AR Murugadoss, Sun TV, Anirudh Ravichander