"Adjustment பிரச்சனை இருக்கு.. அதை எதிர்கொள்ளனும்னா.." சுந்தரி & பாரதி கண்ணம்மா ஹீரோயின்கள் Exclusive
முகப்பு > சினிமா செய்திகள்சுந்தரி சீரியல் மூலம் பிரபலமானவர் கேப்ரியலா. இதேபோல் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமானவர் வினுஷா.

இருவருமே தங்களுடைய கருப்பு நிறத்தையே தங்களுடைய ப்ளஸ்ஸாக பார்க்கின்றனர். அதையே பிளஸ் ஆக மாற்றி குறிப்பிட்ட கதாபாத்திரங்களின் மூலம் தமிழ் சின்னத்திரை உலகில் கோலோச்சி வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் தற்போது சேர்ந்து நடித்திருக்கும் N4 திரைப்படம் குறித்து பேசி இருக்கின்றனர். இந்த திரைப்படம் வரும் மார்ச் 17ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் தளத்தில் பேசியுள்ள இவர்கள், திரைத்துறையில் பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் குறித்து பேசியபோது, “எல்லா துறைகளைப் போலவே திரை துறையிலும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. அட்ஜஸ்ட்மென்ட் உள்ளிட்ட பல விஷயங்கள் இருக்கின்றன. ஆனாலும் எங்களுக்கு குடும்பத்தாரின் உறுதுணை இருந்தது. முதலில் அவர்கள் நடிப்பதற்கு அனுப்புவதற்கு தயங்கினார்கள். தற்போது அவர்களே உறுதுணையாக உள்ளனர்” என தெரிவித்திருக்கின்றனர்.
அத்துடன் எந்த சூழ்நிலையிலும் பெண்கள் தங்களிடம் தவறான அணுகு முறையில் நடந்து கொள்பவர்களிடம் NO சொல்வதற்கு பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டும், அப்படி செய்தால் பாதி பிரச்சனை இல்லை, யாரும் நம்மை கட்டாயப்படுத்த முடியாது. அதையும் மீறியும் வன்முறை செலுத்தும் மிருகங்கள் இருக்கின்றனர், எனினும் முதற்கட்டமாக பெண்கள் NO சொல்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டும், அவ்வாறு செய்யும் பொழுது அங்கேயே பாதி பிரச்சனைகள் கிள்ளி எறியப்படுகின்றன என்று தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக தன்னிடம் ஒருவர் கூட அப்படி நடந்துகொள்ளவில்லை மிகவும் மரியாதையுடன் நடத்துகிறார்கள், தனக்கு கிடைத்த வாய்ப்புக்கு பாரதி கண்ணம்மா இயக்குநருக்கு நன்றி என பாரதி கண்ணம்மா நாயகி வினுஷா தெரிவித்துள்ளார்.
"ADJUSTMENT பிரச்சனை இருக்கு.. அதை எதிர்கொள்ளனும்னா.." சுந்தரி & பாரதி கண்ணம்மா ஹீரோயின்கள் EXCLUSIVE வீடியோ