வெள்ளித்திரையில் ஹீரோயினாக தடம் பதிக்கும் 'சுந்தரி' சீரியல் நடிகை.. வெளியான first look போஸ்டர்!!
முகப்பு > சினிமா செய்திகள்சன்.டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலின் மூலம் பிரபலமாகியுள்ளவர் கேப்ரியல்லா.

தமது இயல்பான நிறத்துடனும் திறமையுடனும் தன்னம்பிக்கையுடனும் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிகளை பெற்று வரும் நடிகை கேப்ரியல்லா, தற்போது முழுநீள திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
அனுபமா குமார், அக்ஷய் கமல், மைக்கேல் தங்கராஜ், அப்சல் ஹமீது, வினு ஷா, வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு N4 என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. லோகேஷ் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இதுபற்றி தமது கேப்ரியல்லா தமது இன்ஸ்டாகிராமில் பதிவிடும் போது, "கதைக்கு ஏற்ற நாயகியாக நான் அறிமுகம் ஆகும் முதல் படம் N4 1st look" என குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் ஏ.ஆர்.ரஹ்மான் தமது மாஜா தனியிசை ஸ்ட்ரீமிங் தளத்துக்காக உருவாக்கியுள்ள மூப்பில்லா தமிழே தாயே பாடலுக்காக ரஹ்மானுடன் இணைந்து கேப்ரியல்லா பணிபுரிந்து முடித்ததும் கேப்ரியல்லாவுடன் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.