Reliable Software
www.garudabazaar.com

'போட்றா வெடிய'.. 'பிரபல' ஓடிடியில் 'கர்ணன்'!.. தேதி அறிவிச்சாச்சு.. குஷியில் தனுஷ் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தேசிய விருது பெற்ற அசுரன் திரைப்படத்தை தயாரித்ததை தொடர்ந்து கலைப்புலி தாணு தயாரித்த திரைப்படம் கர்ணன்.

dhanush Karnan premiere on amazon prime OTT date locked

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய இந்த திரைப்படம் மாரி செல்வராஜின்  இரண்டாவது திரைப்படம். மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் நடிப்பில் வெளியான அவரது முதல் திரைப்படமான பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கிய 2வது படம் கர்ணன். 

இந்த திரைப்படத்துக்கும கலவையான விமர்சனங்களும் வரவேற்புகள் எழுந்தன. எனினும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் நேரடியாக ரிலீசாகி குறிப்பாக தனுஷ் ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்தது. இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் எப்போது மீண்டும் ஓடிடியில் வெளியாகும் என்ற கேள்வி எழுந்தது. சில மாதங்களில் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது.

தற்போது அந்த தகவல் உறுதியாகியிருக்கிறது. அமேசான் ப்ரைம் தளத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன், லால் ,பிரியா சந்திரமௌலி ,கௌரி கிஷன், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியிருக்கும் கர்ணன் திரைப்படம் இந்த மே மாதம் 14-ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி ஒளிபரப்பாகிறது. 

ALSO READ: "முடித்தே தீருவோம்".. கலைஞரை மேற்கோள் காட்டி புதிய முதல்வருக்கு சூர்யாவின் வாழ்த்தும் கோரிக்கையும்!

தொடர்புடைய இணைப்புகள்

dhanush Karnan premiere on amazon prime OTT date locked

People looking for online information on Dhanush, Kalaipuli S. Thanu, Karnan, Mari Selvaraj, Santhosh Narayanan will find this news story useful.