Jango Others
www.garudabazaar.com

VIDEO: சிவகார்த்திகேயன் வெளியிட்ட நானி நடிக்கும் SSR படத்தின் சூப்பர் தமிழ் டீசர்! எப்படி இருக்கு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர்கள் நானி, சாய்பல்லவி, கீர்த்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகி வரும் #SSR 'ஷ்யாம் ஷிங்கா ராய்' படத்தை ராகுல் சாங்கிருத்தியன் இயக்குகிறார்.

SSR Tamil Teaser to be launched by Siva Kartikeyan

விஸ்வரூபம் படத்தின் ஒளிப்பதிவாளர் சானு வர்கீஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் மிக்கி ஜே மேயர் இசையமைக்கிறார். தேசிய விருதுப்பெற்ற 'ஜெர்சி' பட எடிட்டர் நவீன் நூலி படத்தொகுப்பு செய்கிறார். சூப்பர் நேச்சுரல் திரில்லர் வகைமையில் இந்த திரைப்படம் உருவாகிறது. கொல்கத்தா நகரை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகி உள்ளது.

SSR Tamil Teaser to be launched by Siva Kartikeyan

இதுவரை கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள், வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த படத்தில் வாசு எனும் கதாபாத்திரத்தில் நானி நடிக்கிறார். மேலும் இந்த படம் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி கிறிஸ்துமசை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு இந்த படத்தின் தமிழ் டீசரை நடிகர் சிவகார்த்திக்கேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்;

SSR Tamil Teaser to be launched by Siva Kartikeyan

இதே கிறிஸ்துமஸ்க்கு சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன், ரன்வீர் சிங் - ஜீவா நடித்த 83  ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.

VIDEO: சிவகார்த்திகேயன் வெளியிட்ட நானி நடிக்கும் SSR படத்தின் சூப்பர் தமிழ் டீசர்! எப்படி இருக்கு? வீடியோ

மேலும் செய்திகள்

SSR Tamil Teaser to be launched by Siva Kartikeyan

People looking for online information on Abhinav Gomatam, Madonna Sebastian, Murali Sharma, Nani, Rahul Ravindran, ShyamSinghaRoy, SSR will find this news story useful.