ராஜமௌலியின் RRR ரிலீஸ் தேதி அறிவிப்பு - ''பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்ட்ஸ்லா சிதறப்போது...''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாகுபலியின் இரண்டு பாகங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் ராஜமௌலி சுதந்திரப் போராட்ட வரலாற்று பின்னணி கொண்ட படமான RRR என்ற படத்தை இயக்கி வருகிறார்.

SS Rajamouli RRR Movie will release in January 8, 2021

இந்த படத்தில் ராம் சரண் அல்லூரி சித்தராம ராஜூவாகவும்,  ஜூனியர் என்டிஆர் கொமரம் பீம் ஆகவும் நடித்து வருகின்றனர். மேலும் அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, ஒலிவியா மோரிஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு கேகே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, எம்எம் கீரவாணி இசையமைக்கிறார். டிவிவி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தற்போது தகவல் கிடைத்துள்ளது. அதன்படி இந்த படம் 2021, ஜனவரி 8 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment sub editor