www.garudabazaar.com

நடிகர் நகுலின் மனைவி..."தயவு செஞ்சு என் குழந்தைக்கு இப்படி பண்ணாதீங்க".. கொந்தளித்து பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நகுல். அதன்பிறகு நீண்ட இடைவெளிகள் கழித்து காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் மீண்டும் நகுல் தன்னுடைய திரைப் பயணத்தை புத்தம்புதிய பொலிவுடன் புதிய உடல் தோற்றத்துடன் தொடர்ந்தார்.

Sruti nakul reacts to digital pages uses her child pics

தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நகுல் மற்றும் அவருடைய மனைவி ஸ்ருதி இருவருக்கும் அண்மையில் தான் அகிரா எனும் பெண் குழந்தை பிறந்தது. இந்த தம்பதியர் பலருக்கும் பிடித்தமான தம்பதியராக வலம் வரும் நிலையில் இவர்களின் ரசிகர்கள் பலரும் இவர்களை சமூக வலைதளங்களின் மூலம் பின் தொடர்கின்றனர்.

நகுலின் மனைவி ஸ்ருதியும் அவ்வப்போது சமூகவலைதளங்களில் மூலம் ரசிகர்களுடன் பல்வேறு நிகழ்வுகளை பகிர்ந்து கொள்வார். இந்த நிலையில்தான் ரசிகர் ஒருவர் இவர்களுடைய மகள் அகிராவுக்கு தனி சமூக வலைதள பக்கத்தை தொடங்கி அதில் அகிராவின் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் நிகழ்வுகளை பதிவேற்றம் செய்து வருவதை பார்த்து சற்று கோபமாகி இருக்கிறார்.

இது குறித்த தம்முடைய பதிவில் குறிப்பிட்டுள்ள ஸ்ருதி, “ரசிகர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் அன்பும் அக்கறையும் பாசமும் புரிகிறது. ஆனாலும் ஒரு மைனர் குழந்தைக்கு இப்படியான தனி பக்கங்களை தொடர்வது தேவையில்லாதது. அது சட்டவிரோதமானது. குறிப்பாக பெற்றோர்களாகிய நாங்கள் அதை விரும்பவில்லை எனும்போதும், நாங்களே அகிராவுக்கான சமூகவலைதள பக்கத்தை தொடங்கவில்லை எனும்போது ரசிகர் ஒருவர் இப்படி தொடங்குவது எங்களுக்கு உடன்பாடு இல்லாத ஒரு விஷயமாக இருக்கிறது.

இது பற்றி சம்பந்தப்பட்டவருக்கு நான் இன்ஸ்டாகிராமில் மெசேஜ் செய்தேன். முதலில் அகிரா சம்பந்தப்பட்ட பதிவுகளை நீக்குவதாக அவர் தெரிவித்தார். ஆனால் தொடர்ந்து மெசேஜ் அனுப்பும் போது, எந்த ரெஸ்பான்ஸூம் அவரிடத்தில் இருந்து இல்லை. எனவே அனைவரும் அந்த குறிப்பிட்ட அந்த பக்கத்தை ரிப்போர்ட் செய்யுங்கள். இதுபோன்று வேறு பக்கங்களை பார்த்தாலும் அவற்றை ரிப்போர்ட் செய்யுங்கள்!” என்று கடுப்பாகி பேசியிருக்கிறார்.

செலிபிரிட்டிகளின் குழந்தைகளுக்கு இப்படியான பக்கங்கள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் அவை அந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு உடன்பட்டுதான் பெரும்பாலும் இருக்கின்றன. பெற்றோர்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கும் சூழலில் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தர வேண்டும் என்கிற தொனியில் பலரும் ஸ்ருதியின் இந்த ஆவேசத்துக்கு லைக் போட்டு வருகின்றனர்.

நடிகர் நகுலை பொறுத்தவரை அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து நடுவராக பங்கேற்று வருகிறார். பரபரப்பான இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியிட்ட பிரபலங்கள் இணைந்து கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் நகுலின் மனைவி..."தயவு செஞ்சு என் குழந்தைக்கு இப்படி பண்ணாதீங்க".. கொந்தளித்து பதிவு! வீடியோ

Sruti nakul reacts to digital pages uses her child pics

People looking for online information on BBJodigal, Nakul, Sruti Nakul will find this news story useful.