www.garudabazaar.com

திரையுலகில் மற்றுமொரு மரணம்!! பிரபல வில்லன் மற்றும் நகைச்சுவை நடிகர் காலமானார்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ்த் திரைத் துறையினர் பலரும் இந்த பாண்டமிக் காலக்கட்டத்தில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

vadivelu movie comedy fame tamil actor kalidas dies

கொரோனா, வயதுமுதிர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திரைத்துறையின் ஜாம்பவான்கள் பாடகர் எஸ்பிபி, இயக்குநர்கள் எஸ்பி ஜனநாதன், கே.வி.ஆனந்த், தாமிரா என திரைத் துறையைச் சேர்ந்த பலரும் காலமாகினர்.

இதேபோல் நகைச்சுவை நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா, கில்லி மாறன் உள்ளிட்ட பலரும் இதே காலக்கட்டத்தில் உயிரிழந்தனர். இந்த வரிசையில் தற்போது பிரபல வடிவேலு படங்களில் நடித்து வந்த காமெடி நடிகர் வி.காளிதாஸ் உயிரிழந்துள்ளார்.

வடிவேலு நடித்த ஜனனம் படத்தில் இன்ஸ்பெக்டராக வரும் காளிதாஸ்,  வடிவேலுவுடன் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் நம்மால் மறக்க முடியாதவைகளாக இன்றும் இருக்கின்றன. 

நடிகர் காளிதாஸ், பிரபல வில்லன் நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும், சீரியல் நடிகராகவும் கூட அறியப்படுபவர். இவரது திடீர் மரணத்தால் அவரது குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. 

vadivelu movie comedy fame tamil actor kalidas dies

இந்நிலையில் நடிகர் வி.காளிதாஸ் இன்று காலமானார். இவருடைய இறுதிச் சடங்கு சென்னை போரூரில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்களால் நடத்தப்படுகிறது. காளிதாஸின் உயிரிழப்புக்கு திரையுலகினர் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: விபத்தில் சிக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்!! .."அந்த Marriage காட்சி Shooting-க்கு வரும்போது".. தங்கை நெகிழ்ச்சி பதிவு!

vadivelu movie comedy fame tamil actor kalidas dies

People looking for online information on Kalidass, RIPKalidass, Vadivelu comedian kalidas, Vadivelu comedies, Vadivelu comedy will find this news story useful.