Maha
www.garudabazaar.com

Video: “Love பண்ணேன்.. எனக்காக 16 நாள் குடிக்காம இருந்தான்.. ” - Sreenidhi பேட்டி | shakeela

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிஹைண்ட்வுட்ஸ் டிவி யூடியூப் சேனலுக்காக நடிகை ஷகிலா எடுத்த நேர்காணலில் நடிகை ஸ்ரீநிதி நிறைய விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார்.

Sreenidhi breaks about her love shakeela interview video

அதில் முதலில் ஷகிலா பேசும் பொழுது, “சிம்பு உன்னை காதலித்ததாக சொல்லிக் கொண்டிருந்தாய்.. இப்போதும் அந்த நிலைப்பாட்டில் தான் இருக்கிறாயா.?” என்று கேள்வி கேட்கிறார். இந்த கேள்விக்கு ஸ்ரீநிதி சொன்ன பதில்கள் இந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கின்றன.

அதன்படி சின்னத்திரை பிரபலமான ஸ்ரீநிதி, ஷகிலா கேட்ட கேள்விப்படி சிம்பு தன்னை காதலிப்பதாக சொன்ன கூற்று உண்மைதான் என்று முதலில் ஒப்புக் கொள்கிறார். மேலும் பேசியவர், “ஆனால் இப்போது நான் அந்த நிலைப்பாட்டில் இல்லை. நான் அப்போது எமோஷனலாக இருந்தேன். சிம்பு என்னை லவ் பண்ணியதாக கற்பனை பண்ணிக் கொண்டேன்.” என்று விளக்கம் அளித்துள்ளார்.

Sreenidhi breaks about her love shakeela interview video

மேலும் பேசியவர், “நான் இப்போது தான் எனக்காக இருக்கிறேன். என்னை எல்லாரும் மெண்டல் என சொல்கிறார்கள். என்னை போதைப்பொருளுக்கு அடிமையானவள் என சொல்கிறார்கள். என் அம்மா, நண்பர்கள் எல்லாருமே நம்பினார்கள். நான் போதை மறுவாழ்வு மையத்தில் இருந்தேன். ஆனால் நான் போதைக்கு அடிமை இல்லை. நான் இந்த போதைப்பொருளை பயன்படுத்தியதை அறிந்து வெளியே எடுத்து போட்டான். ஆனால் அவனை போதைப்பொருளை விற்றதாக சொல்கிரார்கள். அதன் பின்னர் அவன் தப்பு பண்ணியதற்கான தண்டனையை அனுபவிக்கிறான்.

Sreenidhi breaks about her love shakeela interview video

எனக்காக 16 நாள் அவன் குடிக்காமல் இருந்தான். நான் அவனை காதலித்தேன், ஆனால் அவனது குடும்பம் என்னை மதிக்கவும் இல்லை, என்னை பார்த்து பயப்படுகிறார்கள். ” என்று குறிப்பிட்டுள்ளார்.  நடிகை ஸ்ரீநிதியை, நடிகை ஷகிலா நேர்காணல் செய்யும் முழு வீடியோவை இணைப்பில் காணலாம்.

VIDEO: “LOVE பண்ணேன்.. எனக்காக 16 நாள் குடிக்காம இருந்தான்.. ” - SREENIDHI பேட்டி | SHAKEELA வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sreenidhi breaks about her love shakeela interview video

People looking for online information on Shakeela, Shakeela Sreenidhi interview, Sreenidhi, The Controversial Show will find this news story useful.