"சிம்பு கூட கல்யாணம் நடந்தா நல்லா இருக்கும், ஆனா" இன்ஸ்டாவில் சொன்ன Sreenidhi.. "அவங்க வெக்கத்த பாரு.."

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான சீரியலில் தோன்றி, மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனவர் நடிகை ஸ்ரீநிதி.

Sreenidhi reveals she has boyfriend in instagram

மிக குறுகிய காலத்திலேயே சீரியலில் தோன்றி, நிறைய ரசிகர் பட்டாளத்தையும் அவர் சம்பாதித்துள்ளார்.

அது மட்டுமில்லாமல், அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீநிதி பகிரும் புகைப்படங்கள், வீடியோக்கள் மஃற்றும் இன்ஸ்டா ஸ்டோரிகள் என அனைத்தும் நெட்டிசன்கள் மத்தியில் அதிக அளவில் வைரலாகும்.

ஆதரவாக இருந்த ரசிகர்கள்

இது ஒரு புறம் இருக்க, சமீபத்தில் Depression தொடர்பாக ஸ்ரீநிதி பகிர்ந்திருந்த விஷயங்கள், அதிகம் பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது. அதே போல, தன்னை விமர்சித்து வந்த கருத்துக்களுக்கு கூட, நேரடியாக பதிலடி கொடுத்து அதிக கவனத்தை பெற்றிருந்தார் ஸ்ரீநிதி. இதன் பிறகு, ரசிகர்கள் பலரும் ஸ்ரீநிதிக்கு அதிக ஆதரவினை கொடுத்து வந்தனர். அவருக்கு பக்க பலமாகவும் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் விளங்கினர்.

Sreenidhi reveals she has boyfriend in instagram

சிம்பு'வ கல்யாணம் பண்ண ஆச தான்..

இதனிடையே, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஸ்ரீநிதி தற்போது பகிர்ந்துள்ள ஸ்டோரி ஒன்று, அதிகம் வைரலாகி வருகிறது. "ஒரு நாள் அனைவரும் திருமணம் செய்து கொள்வார்கள். நானும் சிம்புவும் தான் மீதம் இருப்போம்" என குறிப்பிடப்பட்ட மீம் ஒன்றை ஸ்ரீநிதி பகிர்ந்திருந்தார். மேலும், இந்த மீம் கீழே "நீங்கள் இரண்டு பேரும் ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது?" என துப்பாக்கி படத்தில் ஜெயராம் சொல்லும் Template ஒன்றும் இடம்பெற்றிருந்தது.

Sreenidhi reveals she has boyfriend in instagram

எனக்கு ஆள் இருக்கே..

இதனை பகிர்ந்த ஸ்ரீநிதி, "நன்றாக தான் இருக்கும். ஆனா, எனக்கு இப்போ ஆள் இருக்கே" என ஜாலியாக குறிப்பிட்டுள்ளார். சிம்புவை திருமணம் செய்ய ஆசை இருந்தும், காதலர் உள்ளதை யார் என குறிப்பிடாமல், ஜாலியாக இன்ஸ்டாவில் ஸ்ரீநிதி போட்டு உடைக்க, அந்த பாய் ஃபிரண்ட் யாராக இருக்கும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Sreenidhi reveals she has boyfriend in instagram

ஒரு வழியாக காதலன் உள்ளதை வெளிப்படையாக போட்டு உடைத்த ஸ்ரீநிதி, விரைவில் அது யார் என்பதையும் அவரே அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பிலும் ரசிகர்கள் உள்ளனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

"சிம்பு கூட கல்யாணம் நடந்தா நல்லா இருக்கும், ஆனா" இன்ஸ்டாவில் சொன்ன SREENIDHI.. "அவங்க வெக்கத்த பாரு.." வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sreenidhi reveals she has boyfriend in instagram

People looking for online information on Boy Friend, Silambarasan TR, Sreenidhi will find this news story useful.