Maha
www.garudabazaar.com

Video: "Love பண்ணது என்னோட Imagination தான்" - Sreenidhi பேட்டி | shakeela

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிஹைண்ட்வுட்ஸ் டிவிக்காக ஷகிலா எடுத்த நேர்காணலில் நடிகை ஸ்ரீநிதி நிறைய விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார்.

simbu is like brother says Sreenidhi shakeela interview

Also Read | 'லால்சிங் சத்தா' பட நாக சைதன்யாவின் கேரக்டர் லுக்... வெளிவந்த சூப்பரான தமிழ் போஸ்டர்!

அதில் முதலில் ஷகிலா பேசும் பொழுது, “சிம்பு உன்னை காதலித்ததாக சொல்லிக் கொண்டிருந்தாய்.. இப்போதும் அந்த நிலைப்பாட்டில் தான் இருக்கிறாயா.?” என்று கேள்வி கேட்கிறார். இந்த கேள்விக்கு ஸ்ரீநிதி சொன்ன பதில்கள் இந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கின்றன.

அதன்படி சின்னத்திரை பிரபலமான ஸ்ரீநிதி, ஷகிலா கேட்ட கேள்விப்படி சிம்பு தன்னை காதலிப்பதாக சொன்ன கூற்று உண்மைதான் என்று முதலில் ஒப்புக் கொள்கிறார். மேலும் பேசியவர், “ஆனால் இப்போது நான் அந்த நிலைப்பாட்டில் இல்லை. நான் அப்போது எமோஷனலாக இருந்தேன். அப்போது சிம்பு என்னை லவ் பண்ணியதாக நானாகவே நினைத்துக் கொண்டேன். கற்பனை பண்ணிக் கொண்டேன். அது என்னுடைய இமேஜினேஷன் தான். ஆனால் பிறகு யோசித்துப் பார்த்தேன். உண்மையிலேயே சிம்பு என்னை அப்படி லவ் பண்ணி இருந்தால், அவர் ஏன் இப்படி ஒரு சூழ்நிலையில் எதையெதையோ பற்றி ட்விட்டரில் பேசுகிறார். என்னை பற்றி யோசிக்காமல் இருக்கிறார் என்று யோசித்தேன்.

simbu is like brother says Sreenidhi shakeela interview

தற்போது நான் அந்த கற்பனையில் இருந்து வெளியே வந்து விட்டேன். சிம்புவை நான் காதலிக்கவில்லை, சிம்புவும் என்னை காதலிக்கவில்லை. ஆனால் எனக்கு சிம்புவை பிடிக்கும்.” என்று சொன்னதும் இதைக் கேட்ட ஷகிலாவுக்கு ஒரு கணம் கண்ணை கட்டி விட்டது.

simbu is like brother says Sreenidhi shakeela interview

இருப்பினும், “குழந்தை தெளிவாக சொல்லி இருக்கிறாள்.. சிம்பு அவளுக்கு அண்ணன் போன்றவர்.. இனி யாரேனும் இதைப்பற்றி தவறாக பேசினால் அவ்வளவுதான்.” என்று விளக்கம் அளிக்கிறார். ஸ்ரீநிதியை ஷகிலா நேர்காணல் செய்யும் முழு வீடியோவை இணைப்பில் காணலாம்.

Also Read | ‘கண்ணோடு காண்பதெல்லாம்’.. ரயிலில் வேற லெவலில் பாடிய பெண்.. தேடிவரும் இணையவாசிகள்.!

VIDEO: "LOVE பண்ணது என்னோட IMAGINATION தான்" - SREENIDHI பேட்டி | SHAKEELA வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

simbu is like brother says Sreenidhi shakeela interview

People looking for online information on Shakeela, Shakeela Sreenidhi interview, Sreenidhi, The Controversial Show will find this news story useful.