எஸ்.பி.பி வழங்கும் 'அதிகாரம்' - இயக்குநராகும் 'சென்னை 28' படத் தயாரிப்பாளர்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 04, 2020 11:36 AM
பிரபல பாடகர் எஸ்.பி.பியின் மகன் எஸ்.பி.பி.சரண் தமிழ் சினிமாவின் பிரபல பாடகராகவும் நடிகராகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும், தயாரிப்பாளராகவும் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்த 'மழை', வெங்கட் பிரபு இயக்கிய 'சென்னை 28' உள்ளிட்ட படங்களை தனது கேப்பிடல் ஃபிலிம் வொர்க்ஸ் சார்பாக தயாரித்திருந்தார்.

இவர் தயாரித்து, தியாகராஜா குமாரராஜா இயக்கிய 'ஆரண்ய காண்டம்' விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எஸ்.பி.சரண், 'அதிகாரம்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.
இந்த படத்துக்கு கேபிள் சங்கர் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இந்த படத்துக்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்ய, தீனா தேவராஜன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
Tags : Adhikaram, S.P.Charan, SP Balasubramaniam