www.garudabazaar.com

சிவகார்த்திகேயன் பிறந்தநாளுக்கு DON படக்குழு கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு டான் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

SivaKarthikeyan Birthday Special Don Movie Poster

உலகப்புகழ் பெற்ற உலகின் மிகப்பெரிய திரையரங்கில் வெளியாகும் 'வலிமை'! செம மாஸ்

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக டாக்டர் (Doctor) திரைப்படம் படம் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய் வசூல் செய்தது.

இந்த டாக்டர் திரைப்படம். 'டாக்டர்' படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'டான்'. இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது.

SivaKarthikeyan Birthday Special Don Movie Poster

இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் டான் படத்திற்கு இசையமைக்கிறார். டான் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை சோனி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்றது. டியூனி ஜான் இந்த படத்தின் போஸ்டரை வடிவமைத்தார். சிவகார்த்திகேயனின் டான் படம் வரும் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

SivaKarthikeyan Birthday Special Don Movie Poster

சிவகார்த்திகேயன், இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனை முன்னிட்டு டான் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. ஆசிரியர்களை எப்படி தொந்தரவு  செய்வது என்ற புத்தகத்தை படிப்பது போல இந்த போஸ்டர் அமைந்துள்ளது.

SivaKarthikeyan Birthday Special Don Movie Poster

'டாக்டர்' படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இந்த படத்தில் அங்கையற்கன்னி எனும் பெயரில் பிரியங்கா நடிக்கிறார். இவர்களுடன் S J சூர்யா, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்தில் கல்லூரி மாணவராக நடிக்க கனிசமாக தனது உடல் எடையைக் குறைத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

"வலிமை' படம் FDFS பார்க்க வருகை தரும் நடிகை ஜான்வி கபூர்? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Birthday Special Don Movie Poster

People looking for online information on சிவகார்த்திகேயன், Birthday, Don Movie, Sivakarthikeyan will find this news story useful.