20 வருடங்களுக்கு பிறகு 'மர்ம தேசம்' இயக்குனரின் குறும்படத்தில் நடித்துள்ள சூரரைப் போற்று சே..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' திரைப்படம் கடந்த வருடம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவு அளித்துள்ளனர். விமர்சகர்களும் படத்தை பாராட்டி எழுதி வந்தனர். இந்நிலையில் இந்தியாவின் முதன் பட்ஜெட் பிளைட்டை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத் என்பவரின் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார். கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தமிழ்ப் படம் என்ற அபார சாதனையைப் படைத்தது சூரரைப் போற்று. மேலும் அடுத்த அதிரடியாக ஆஸ்கர் விருதுக்கும் பல பிரிவுகளின் கீழ் பரிந்துரைப்பட்டுள்ளது.

Soorarai Pottru's Che Shortfilm by Marma Desam Naga 'மர்ம தேசம்' இயக்குனரின் குறும்படம்

அந்த படத்தில் சூர்யாவின் நண்பராக சே என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்திருப்பவர் நடிகர் கிருஷ்ண குமார். இந்நிலையில் சூரரைப்போற்று படத்திற்கு முன்பு அவர் நடித்துள்ள குறும்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த குறும்படத்திற்கு He, Him, Himself என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த குறும்படத்தை 90-ஸ் கிட்ஸ்களின் மறக்கமுடியாத நாயகனான மர்மதேசம், விடாது கருப்பு போன்ற தொடர்களை இயக்கிய நாகா இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குறும்படத்தை பிரபல டிவி தொகுப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகையான ஷைலஜா செட்லுர் தயாரித்துள்ளார்.

Soorarai Pottru's Che Shortfilm by Marma Desam Naga 'மர்ம தேசம்' இயக்குனரின் குறும்படம்

1990 களில் சன் டிவியில் ஒளிபரப்பான மர்மதேசம் தொடருக்கு இன்றளவும் ரசிகர்கள் இருக்கின்றனர். டெக்னிக்கலாக பல புதிய விஷயங்களை அப்போதே தனது தொடர்களில் கையாண்டிருப்பார் நாகா. அதற்கு பிறகு அவர் விடாது கருப்பு, சிதம்பர ரகசியம் போன்ற பல வெற்றித் தொடர்களை இயக்கினார். மக்களை கூட்டம் கூட்டமாகஅமர்ந்து சீரியல் பார்க்க வைத்த காலம் அது. இந்நிலையில் கிட்டதட்ட இருபது வருடங்களுக்கு பிறகு மீண்டும் நாகா  இயக்கியிருக்கும் இந்த மர்மமான குறும்படம் ரசிகர்களுக்கு ஒரு நல்ல டிரீட்டாக  இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Soorarai Pottru's Che Shortfilm by Marma Desam Naga 'மர்ம தேசம்' இயக்குனரின் குறும்படம்

20 வருடங்களுக்கு பிறகு 'மர்ம தேசம்' இயக்குனரின் குறும்படத்தில் நடித்துள்ள சூரரைப் போற்று சே..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Soorarai Pottru's Che Shortfilm by Marma Desam Naga 'மர்ம தேசம்' இயக்குனரின் குறும்படம்

People looking for online information on Krishna Kumar, Marma desam, Soorarai Pottru will find this news story useful.