பன்னிகங்ளோட சண்ட போட்டா இப்படித்தான்....ரஜினி ஹீரோயின் ஆவேசம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த ஜூன் 14-ம் தேதி  சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். சுஷாந்த் சிங்கின் மறைவால் திரை உலகம் மற்றும் அவரது ரசிகர்கள் ஆழந்த இரங்கல்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Sohakshi sinha slams tweets against Sushant singh rajput death

அவரது மறைவுக்குக் காரணம் கடந்த சில மாதங்களாக அவருக்கு ஏற்பட்டிருந்த மன அழுத்தம் என்றும், பாலிவுட் திரையுலகில் நிலவி வரும் வாரிசு அரசியலால் மன ரீதியாக அவர் பாதிப்படைந்திருந்தார் என்றும் சில பிரபலங்கள் பதிவிட்டு வந்தார்கள்.

ரஜினிகாந்துடன் லிங்கா படத்தில் நடித்த பிரபல ஹிந்தி நடிகை சோனாக்‌ஷி சின்ஹா இதற்கு பதில் அளிக்கும்விதமாக தனது ட்விட்டரில் சுஷாந்த் சிங் மறைவை பற்றி பதிவிட்டு அதில் குளிர்காய நினைக்கும் சிலரை காட்டமாக விமர்சித்துள்ளார். சோனாக்‌ஷி அதில் குறிப்பிட்டது, ‘பன்றிகளுடன் நீங்கள் மல்லுக்கு நின்று சண்டை போட்டால், நீங்கள் அழுக்காகிவிடுவீர்கள். அது அந்த பன்றிகளுக்கு சந்தோஷமாக இருக்கும். நம்மில் ஒருவர் மறைந்துவிட்டார். அவரது இறப்பின் காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனால் அதற்குள் அது குறித்து சிலர் தேவையற்ற வதந்திகளைப் பரப்பி ஆதாயம் தேட முயல்கின்றனர்.

இது போன்ற நெகட்டிவ் கருத்துக்களை கூறுவதை நிறுத்துங்கள். உங்கள் வெறுப்பையும் உங்கள் மனதில் இருக்கும் விஷத்தையும் வெளிக் கொண்டு வர இது சமயம் இல்லை. இறந்து போனவருக்கு கொஞ்சமாவது மரியாதை தாருங்கள். ஒருவரின் இறப்பில் குளிர் காய நினைக்காதீர்கள்’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார்

 

சோனாக்‌ஷி சின்ஹா பிரபல ஹிந்தி நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Sohakshi sinha slams tweets against Sushant singh rajput death

People looking for online information on Sonakshi Sinha, Sushant Singh Rajput will find this news story useful.