இந்தியாவில் கொரோனா வேகமாக பரவிவருவதால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் விக்ரம் வேதா, கைதி படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். வேகமாக பரவிவரும் கொரோனாவிற்கு, மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக கோபமான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில், ''ஒரு நோயின் பயங்கரம், தனி மனித கட்டுப்பாடு, பிறர் நலன் என எந்த பொறுப்பும் இல்லாத கேவலமான சமூகத்தில் வாழ்வது வேதனை...! “எல்லாத்தயும் இழுத்து மூடுங்க” “சொன்னா கேக்குற மாதிரி தெரியல” திரு. விஜயபாஸ்கர் மற்றும் தமிழக அரசாங்கத்தை நினைத்தால் பெருமையாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
ஒரு நோயின் பயங்கரம் 😡 தனி மனித கட்டுப்பாடு 😡 பிறர் நலன் 😡 என எந்த பொருப்பும் இல்லாத கேவலமான சமூகத்தில் வாழ்வது வேதனை...! 😔😔😔“எல்லாத்தயும் இழுத்து மூடுங்க”
“சொன்னா கேக்குற மாதிரி தெரியல” and very proud of u sir@Vijayabaskarofl @CMOTamilNadu #coronavirusindia #corona
— 𝐒𝐀𝐌 𝐂 𝐒 (@SamCSmusic) March 23, 2020