www.garudabazaar.com

ஷங்கர் இயக்கத்தில் வில்லனாக S.J. சூர்யா? RC15 படம் பற்றி SJS கொடுத்த அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஷங்கர் - ராம் சரண் இணையும் RC15 படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா இணைந்துள்ளார்.

SJ Suryah about RC15 Movie and Director Shankar

Also Read | இந்தா வந்துருச்சுல AK61 அப்டேட்.. ஷூட்டிங் எப்போ? மஞ்சு வாரியர் சொன்ன சூப்பர் தகவல்!

RC15 படத்தின் துவக்க விழா கடந்தாண்டு செப்டெம்பர் 8 அன்று ஐதராபாத்தில் நடந்தது.

இந்த படத்தை தெலுங்கு பட உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் தில் ராஜூ தயாரிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் திரு (எ) திருநாவுக்கரசு ISC இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை  கீரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ராம்சரணுடன் 'வினயவிதேயராமா' படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தொடர்ச்சியாக தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார். ராம்சரண்- கீரா அத்வானியுடன் நடிகர்கள் ஜெயராம், சுனில், அஞ்சலி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ராஜமுந்திரி அருகே உள்ள தோசகாயலபள்ளி கிராமத்தில் நடந்தது. பின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்தது. நான்காம் கட்ட படப்பிடிப்பு கடந்த மே மாதம் விசாகப்பட்டினத்தில் நடந்தது.

இந்நிலையில்  #RC15 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.  ஐத்ராபாத் & விசாகப்பட்டினத்தில் இந்த படப்பிடிப்பு நடைபெறும் என ஷங்கர் ஏற்கனவே கூறியுள்ளார். இந்நிலையில் இந்த படப்பிடிப்பில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா சில நாட்களுக்கு முன் இணைந்துள்ளார். இது குறித்த தகவலை அதிகாரப்பூர்வமாக தனது டிவிட்டர் பக்கத்தில் எஸ் ஜே சூர்யா பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் "WOW ஷங்கர் சார் 🙏 நான் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தபோது அவருடைய செட்களை எட்டிப்பார்த்திருக்கிறேன், 'நண்பன்' படத்தில் ஒரு கேமியோ செய்தேன், இப்போது RC15 படத்தில் வில்லனாக 🙏- அதே கட்டளை, அதிக ஆற்றலை எல்லோரிடமிருந்தும் வாங்குகிறார். உங்களை கண்டு வியக்கிறேன் & கற்றுக்கொள்கிறேன் சார் ஒரு ரசிகனாக மற்றும் நடிகனாக 🙏" என எஸ்‌.ஜே‌.சூர்யா பதிவிட்டுள்ளார்.

 

Also Read | Soundarya Rajinikanth : மீண்டும் தாத்தாவான ரஜினிகாந்த்.!. சௌந்தர்யாவுக்கு பிறந்த 2-வது குழந்தை.. 😍

தொடர்புடைய இணைப்புகள்

SJ Suryah about RC15 Movie and Director Shankar

People looking for online information on RC15 Movie, Shankar, Sj suryah will find this news story useful.