www.garudabazaar.com

Jailer : தலைமுறையை தாண்டிய தலைவர் fan.. ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியுடன் வைரலாகும் சிறுமி.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் திரைப்படங்களுள் ஒன்று  ரஜினிகாந்த் நடிப்பிலான ‘ஜெயிலர்’ திரைப்படம்.

Rajinikanth with little girl fan from Jailer shooting spot

அண்ணாத்த திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்தார் ரஜினிகாந்த். சிறுத்தை சிவா இயக்கத்திலான இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தது. டி.இமான் இசையில் உருவான இந்த திரைப்படம் அந்த வருடத்தின் டாப் டெலிவிஷன் டி.ஆர்.பி ரேட்டிங்கில் இடம்பெற்றது. இதேபோல், கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்.

Rajinikanth with little girl fan from Jailer shooting spot

இந்நிலையில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர்  ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்டு மாத தொடக்கத்தில் தொடங்கிய நிலையில், கடந்த ஆகஸ்டு மாதத்தின் கடைசி வாரத்தில் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.  இதில் கண்ணாடி அணிந்தபடி ரஜினிகாந்த் ஸ்மார்ட்டாக நின்றுகொண்டிருந்தார். பின்னர் இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர் யோகிபாபு ஆகியோர் இணைந்தது குறித்த அறிவிப்புகள் வெளியாகின.

Rajinikanth with little girl fan from Jailer shooting spot

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது சென்னை ஆதித்யாராம் ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகின்றன. கடந்த ஆகஸ்டு முதல் வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த ஷூட்டிங்கில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் ரஜினிகாந்துடன் ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில், சிறுமி ஒருவர் ஆட்டோகிராஃப் வாங்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Rajinikanth with little girl fan from Jailer shooting spot

மேலும் அந்த சிறுமியை அன்போடு அணைத்துக்கொண்டும் இன்னொரு புகைப்படத்துக்கு ரஜினிகாந்த் போஸ் கொடுத்துள்ளார். இந்த க்யூட்டான ஃபோட்டோக்கள் இணையத்தில் வலம் வருவதுடன், நடிகர் ரஜினிகாந்த்துக்கு 4 தலைமுறையிலும் தலைமுறை தாண்டி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth with little girl fan from Jailer shooting spot

People looking for online information on Jailer, Jailer BTS, Rajinikanth will find this news story useful.