அயலான் பட ஷூட்டிங் செல்ல மறுக்கிறாரா ரகுல் ப்ரீத் சிங்.?!! - இயக்குநர் வெளிப்படையான பதில்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் நடிக்கும் ரகுல் ப்ரீத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் படம் குறித்து பதிவிட்டுள்ளார். 

ஷூட்டிங் செல்ல மறுக்கிறாரா ரகுல் ப்ரீத்.?! - இயக்குநர் பளீச் | sivakarthikeyan's ayalaan director ravikumar opens rakul preet singh's work

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது அயலான் படத்தில் நடித்து வருகிறார். இன்று நேற்று நாளை திரைப்படத்தை இயக்கிய ரவிகுமார் இத்திரைப்படத்தை  இயக்குகிறார். இதில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார். ஏலியனுடன் சிவகார்த்திகேயன் இருப்பது போல வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

இந்நிலையில் அயலான் படத்தின் ஷூட்டிங்கிற்கு ரகுல் ப்ரீத் சிங் வர மறுப்பதாகவும், அதனால் அவர் படத்தில் இருந்து மாற்றப்படலாம் எனவும் சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் வெளியாகின. இதையடுத்து அதை முற்றிலுமாக மறுத்துள்ள ரகுல் ப்ரீத், ''யார், எப்போது ஷூட்டிங்கை தொடங்குகிறார்கள் என சொல்லுங்கள். நான் வேலை செய்வதற்கே ஆர்வமாக இருக்கிறேன்'' என பதில் கொடுத்தார். 

இதையடுத்து ரகுல் ப்ரீத் சிங்கிற்கு ஆதரவாக அயலான் பட இயக்குநர் ரவிகுமார் தனது பதிவில், ''நான் பார்த்ததில் ரகுல் ப்ரீத் சிங் மிகவும் ஒழுக்கமான நடிகை. அதனால் தவறான செய்திகளை நம்ப வேண்டாம். எங்கள் டீம் அவருடன் ஷூட்டிங்கை தொடங்கி வேலை செய்ய மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறது. அனைத்தும் நார்மல் ஆன பிறகு, படப்பிடிப்பை நடத்தி முடிக்கவிருக்கிறோம்'' என அவர் தெரிவித்துள்ளார். 

 

மேலும் செய்திகள்

ஷூட்டிங் செல்ல மறுக்கிறாரா ரகுல் ப்ரீத்.?! - இயக்குநர் பளீச் | sivakarthikeyan's ayalaan director ravikumar opens rakul preet singh's work

People looking for online information on Ayalaan, Rakul Preet Singh, Ravikumar, Sivakarthikeyan will find this news story useful.