Reliable Software
www.garudabazaar.com

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம்... மரண மாஸ் ரஜினி டையலாக் தான் தலைப்பு.. அதிரடி தகவல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் முதன் முறையாக இணைந்த டாக்டர் படம் ரிலீஸ் தேர்தஹ்ல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா அருள் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், கோவா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. மேலும் யோகிபாபு, பிக்பாஸ் அர்ச்சனா, குக் வித் கோமாளி தீபா  உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் டாக்டர் படத்தின் முதல் பாடலான 'செல்லம்மா' கடந்த வருடம் ரிலீசாகி அமோக வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இரண்டாம் சிங்கிலான 'ஓ பேபி' பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

sivakarthikeyan next with a mass title revealed சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம்

அடுத்ததாக சிவகார்த்திகேயனின் 19வது திரைப்படம் குறித்த அதிரடி அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரிக்கும் லைகா நிறுவனம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். திரு. சுபாஸ்கரன் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயனின் 19வது திரைப்படம் "டான்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்க, பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார். இதற்க்கு அடுத்ததாக KJR ஸ்டுடியோஸ் தயாரிக்கும் புதிய படத்தில் இயக்குனர் அட்லீயின் துணை இயக்குனர் அஷோக் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு 'சிங்க பாதை' என்று பெயரிடப்பட்டுள்ளது. பெயருக்கு ஏற்றார் போல படமும் மரண மாஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

sivakarthikeyan next with a mass title revealed சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம்

தொடர்புடைய இணைப்புகள்

sivakarthikeyan next with a mass title revealed சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம்

People looking for online information on Sivakarthikeyan will find this news story useful.