www.garudabazaar.com

சிவகார்த்திக்கேயன் 'நடித்து வரும்' மாஸ் படம்... புகைப்படங்களுடன் வெளியான புதிய அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'அயலான்', 'டாக்டர்' படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'டான்'.

sivakarthikeyan don movie latest update with official pictures

இந்த படத்தில் கல்லூரி மாணவராக நடிக்கவுள்ளதால், கனிசமாக தனது உடல் எடையைக் குறைத்து நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பூஜையுடன் தொடங்கியது. பின்னர் முதற்கட்டப் படப்பிடிப்பு கொரோனா காரணமாக தடைபட்டது. பின் சமீபத்தில் மீண்டும் பொள்ளாச்சி, ஆக்ரா, சென்னையில் படப்பிடிப்பு துவங்கி நடைப்பெற்றது. 

sivakarthikeyan don movie latest update with official pictures

படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி சில தினங்களுக்கு முன்பு டிவிட்டரில் ஒரு பதிவு ஒன்றை இட்டு, பர்ஸ்ட்லுக் போஸ்டருக்கான போட்டோ சூட் முடிந்ததாகவும், விரைவில் முதல் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் அறிவித்தார். டியூனி ஜான் இந்த படத்தின் போஸ்டரை வடிவமைக்கிறார். இவர் புஸ்பா, ஜகமே தந்திரம், மாறன் படங்களின் போஸ்டரை வடிவமைத்தவர் ஆவார். முதல் லுக் போஸ்டரை அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இந்த படம் பற்றிய புதிய அப்டேட் கிடைத்துள்ளது.

sivakarthikeyan don movie latest update with official pictures

இந்த படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் இன்று துவங்கி உள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளது. அதில் சிவகார்த்திக்கேயன் டப்பிங் பேசுவது போல் உள்ள படமும் அடக்கம்.  

இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். 'டாக்டர்' படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இவர்களுடன் S J சூர்யா, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள்

 

தொடர்புடைய இணைப்புகள்

sivakarthikeyan don movie latest update with official pictures

People looking for online information on Don, Priyanka Mohan, Sivakarthikeyan will find this news story useful.