www.garudabazaar.com

சிவகார்த்திகேயன் வீட்டில் இருந்து வந்த நல்ல செய்தி! அவரே பகிர்ந்த Emotional ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இளம் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தற்போது 2வதாக ஆண் குழந்தை பிறந்துள்ள செய்தியை அவரே உருக்கமாக பகிர்ந்துள்ளார். ஆம், சிவகார்த்திகேயனுக்கு ஏற்கனவே ஆராதனா என்கிற பெண் குழந்தை உள்ள நிலையில், இப்போது ஆராதனாவுடன் ஒரு அழகான இளம் சகோதரர் விளையாட வந்துவிட்டார்.

sivakarthikeyan blessed with baby boy emotional tweet kuttysk

இது தொடர்பான புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன், “18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக… என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி.. அம்மாவும் குழந்தையும் நலம்” என குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து சொல்லிவரும் ரசிகர்கள் #KUTTYSK என்கிற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்ய தொடங்கியுள்ளனர்.

sivakarthikeyan blessed with baby boy emotional tweet kuttysk

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். முன்னதாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள வாழ் திரைப்படம் வரும் ஜூலை 16-ஆம் தேதி சோனி லைவ் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது.  ‘அருவி’ திரைப்படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் ‘வாழ்’ படத்தை இயக்கியுள்ளார்.

ALSO READ:  “முடிஞ்சா பண்ணுனு சவால் விடுறாங்க…வேலைய கெடுக்குறாங்க!” .. உடைத்த 'செம்பருத்தி' கார்த்தி! Video

சிவகார்த்திகேயன் வீட்டில் இருந்து வந்த நல்ல செய்தி! அவரே பகிர்ந்த EMOTIONAL ட்வீட்! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

sivakarthikeyan blessed with baby boy emotional tweet kuttysk

People looking for online information on KuttySK, Sivakarthikeyan will find this news story useful.