சபரிமலைக்கு சென்ற சிரஞ்சீவி.. உடன் சென்ற பெண் குறித்த கேள்வியால் சர்ச்சை.. தேவஸ்தானம் பதிலடி
முகப்பு > சினிமா செய்திகள்திருவனந்தபுரம்: பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியுடன் சபரிமலை தரிசனத்திற்கு ஒரு இளம்பெண்ணும் வந்ததாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. தெலுங்கு இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் இணைந்து நடித்துள்ள ஆச்சாரியா திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தமிழில் இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆக சிரஞ்சீவி நடித்து வருகிறார். போலா ஷங்கர், தமன்னா மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் இப்படத்தை மெஹர் ரமேஷ் இயக்குகிறார். அடுத்தடுத்து படங்களில் பிசியாக இருக்கும் சிரஞ்சீவி அவ்வப்போது குடும்பத்துடன் கோயில்களுக்கு செல்வது வழக்கம்.
சபரிமலை சென்ற சிரஞ்சீவி
அந்த வகையில் சபரிமலைக்கு சென்றது தொடர்பான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை தற்போது திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 13ம் தேதி நடிகர் சிரஞ்சீவி, அவரது மனைவி, சிரஞ்சீவியின் நண்பர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தரிசனத்திற்கு வந்திருந்தனர்.தரிசனம் செய்த பிறகு கோயில் கொடிமரம் அருகே நின்று கொண்டு சிரஞ்சீவி உள்பட அவர்கள் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்நிலையில், ஆந்திராவுக்கு திரும்பிய பின்னர் சபரிமலை சென்ற போது எடுத்த புகைப்படங்களை நடிகர் சிரஞ்சீவி தன்னுடைய டிவிட்டரில் வெளியிட்டார்.
யார் அந்த இளம்பெண்?
இதைப் பார்த்த சிலர், நடிகர் சிரஞ்சீவியுடன் இருப்பது 50 வயதுக்கும் குறைவான இளம்பெண் என்றும், சபரிமலைக்கு சிரஞ்சீவி எப்படி இளம்பெண்ணை அழைத்துச் செல்லலாம் என்றும் கருத்து தெரிவித்தனர். சிறிது நேரத்திலேயே இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஆனால், இதை தேவசம் போர்டு மறுத்துள்ளது. இது குறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் கூறியதாவது, " சிரஞ்சீவியுடன் வந்தது ஆந்திராவை சேர்ந்த ஒரு தனியார் குழும இயக்குனர் சுரேஷ் மற்றும் அவரது மனைவி மதுமதி ஆவர்.
தேவஸ்தானம் பதிலடி
மதுமதி என்பவரைத் தான் 50 வயதுக்கு குறைவான இளம்பெண் என்று சமூக வலைதளங்களில் பொய்யாக பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், அவருக்கு 55 வயது ஆகிறது. ஆதார் கார்டில் குறிப்பிட்டுள்ள ஆதாரத்தின் படி அவரது பிறந்த வருடம் 1966. இதுபோன்ற பொய்யான பரப்புரைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்களிடையே வீண் குழப்பத்தை ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும்" என்று கூறியுள்ளார். மேலும், மதுமதியின் மகன் அவிநாஷ் சுக்கப்பள்ளி தனது முகநூலில் எனது தாயாருக்கு 55 வயது ஆகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Malavika Mohanan Interact Twitter Session With Her Fans
- Chiranjeevi SS Rajamouli Mahesh Babu Prabhas Meet AP CM Jagan
- Actor Sivakarthikeyan Says Thank To All In Twitter
- Suresh Chandra About Shalini Ajithkumar Twitter Account
- What Does Love Do Viral Topic Treding Facebook And Twitter Users
- Keerthy Suresh Joined In Chiranjeevi’s Bolo Shankar Shooting
- Dhanush Aishwarya Rajinikanth Divorce Fans Reaction In Twitter
- Actor Siddharth Apologises To Saina Nehwal For Rude Joke Twitter
- Kanam Movie Teaser Realeased By Surya In Twitter
- Actress Radhika Sarathkumar Twitter Account Hacked Khushbu Tweet
- Thala Ajithkumar Vedalam Telugu Remake Update Chiranjeevi
- ACTRESS SAMANTHA CHANGING HER NAME AGAIN ON TWITTER
தொடர்புடைய இணைப்புகள்
- ഡൽഹിയിൽ പോകുന്നവർ അറിയേണ്ട ഒരിടം. 10 രൂപക്ക് ട്രെൻഡി വസ്ത്രങ്ങൾ ലഭിക്കുന്ന സരോജിനി നഗർ
- Social Media-യിൽ ഒന്നാമതായി ഇന്ത്യയുടെ പ്രധാന മന്ത്രി.
- 'அரசனாக ஜொலிக்கும் ஐயப்பன்' பந்தளத்திலிருந்து பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து சென்ற ஆபரண
- 'Twitter -ல் ரசிகர் வைத்த கோரிக்கை!' நிறைவேற்றி Mass காட்டிய Ravichandran Ashwin..Trend ஆன ரசிகர்!..
- 2 ஆண்டுகளுக்கு பிறகு.. அதிர்ச்சி கொடுத்த சபரிமலை..! பரவசத்தில் திக்குமுக்காடும் பக்தர்கள்
- 'ஆளப்போறான் இந்தியன் உலகம் எல்லாமே' தேடித்தேடி CEO பதவி ! ராவடி ராசாவா நிப்பேண்டா உன்னோட கில்லா
- தேங்கிய மழ...
- சுந்தர்பிச்சையை போல பராக்...TWITTER -ஐ ஆளப்போகும் இந்தியர்..யார் இவர் ?
- "How Much?"..பேஸ்புக்கை கிண்டல் செய்த ட்விட்டர் CEO... கொந்தளித்த நெட்டிசன்கள்..!
- சல்மான்கானிடம் அதிரடி காட்டிய அதிகாரி..! ஆவணம் காட்டினால் தான் அனுமதி என கறார் | Salman Khan
- "ஒன்று கூடிய ஒன்றிய விலங்குகள்"..Twitter-ல் நெட்டிசன்கள் அட்டகாசம்..!
- 'KOO - விற்கு படையெடுக்கும் இந்தியர்கள்' - பின்னணி என்ன?