www.garudabazaar.com

"3 தடவ கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க😅".. கார் வாங்கிய பின் DJ பிளாக்.. சிவாங்கிகிட்ட சொன்ன விஷயம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ஒரு பக்கம் அதிகம் ரசிகர்கள் இருப்பது போல, இதில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களும் பெரிய அளவில் மக்களை கவரக்கூடிய வகையில் தான் இருக்கும்.

Sivaangi insta story about dj black buy new car

Images are subject to © copyright to their respective owners

பிக் பாஸ், குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர் என விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவை அனைத்துமே மிக கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் மக்களை கவரும் அம்சங்களுடன் நிறைந்து இருப்பதால் அனைத்துமே பலரின் ஃபேவரைட் ஆகவும் உள்ளது.

டிஜே பிளாக்..

மேலும் இப்படிப்பட்ட ரியாலிட்டி ஷோக்கள் பலவற்றில் டிஜேவாக இருப்பவர்கள் ஒளிபரப்பும் பாடல்கள் மற்றும் காமெடி வசனங்களும் மக்கள் மத்தியில் மிகப் பிரபலம். அதிலும் குறிப்பாக, டிஜே பிளாக் என அறியப்படுபவர் ஒவ்வொரு ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் ஒளிபரப்பும் பாடல்கள் அந்த அளவுக்கு பொருத்தமாகவும் நம்மை ஒருவிதமாக சிரிப்பலையில் ஆழ்த்த வைக்கும் வகையில் இருக்கும்.

Images are subject to © copyright to their respective owners

குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் டிஜே பிளாக் ஏதாவது ஒரு நிகழ்வு நடக்கும் போது அதற்கு ஏற்றார் போல் வேடிக்கையாகவோ அல்லது உணர்வுபூர்வமாகவோ பாடல்களையும், வசனங்களையும் ஒளிபரப்பும் போது அது பார்ப்பவர்களையும் ஒருவித ரசனையில் ஆழ்த்தவும் செய்யும். இப்படி விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்கள் வெற்றி பெறுவதற்கு பின்னால் டிஜே பிளாக்கும் ஒரு முக்கிய பங்கு வகித்து வருகிறார்.

கார் வாங்கிய டிஜே பிளாக்..

இதனிடையே, சமீபத்தில் புதிய கார் ஒன்றை வாங்கி உள்ள டிஜே பிளாக் மிகவும் நெகிழ்ச்சியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அப்போது அவருடன் பிரபல தொகுப்பாளர்கள் மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கையில் கடினமாக உழைத்து இன்று பிரபலமாகி தற்போது தனது கனவையும் நிறைவேற்றி உள்ளார் டிஜே பிளாக்.

இந்த நிலையில், டிஜே பிளாக் கார் வாங்கி உள்ள சூழலில், அவரது காரில் இருந்தபடி சிவாங்கி பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் அதிக கவனம் பெற்று வருகிறது. சமீபத்தில் புதிய கார் வாங்கி உள்ள டிஜே பிளாக், அதனை ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டு வந்ததாக தெரிகிறது. அப்போது, சிவாங்கி உள்ளிட்ட நண்பர்கள் சிலரும் அந்த காருக்குள் இருந்துள்ளனர்.

அடுத்து டிஜே பிளாக் கல்யாணமா?..

"பிளாக் அண்ணா புது வண்டி சூப்பர்ண்ணே" என சிவாங்கி கூற, காரின் பின்பக்கம் இருந்தவர்கள் அடுத்து கல்யாணம் தான் என கூறுகின்றனர். உடனே சிவாங்கியும், "ஆமா அடுத்து கல்யாணம்" என ஜாலியாக குறிப்பிடுகிறார். "எனக்கு ஏற்கனேவே 3 கல்யாணம் ஆயிடுச்சு யூடியூப்ல" என்றும் சிரித்துக் கொண்டே குறிப்பிடுகிறார் டிஜே பிளாக். இப்படியே கலகலப்பாக அமர்ந்து டிஜே பிளாக்குடன் தான் பேசிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார் சிவாங்கி.

Images are subject to © copyright to their respective owners

கோமாளி டூ போட்டியாளர்..

விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்து பிரபலமான சிவாங்கி, பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு கோமாளியாக களமிறங்கி இருந்தார். 3 சீசனிலும் கோமாளியாக இருந்த சிவாங்கி, தற்போது ஒளிபரப்பாகி வரும் நான்காவது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி சிறந்த ஒருவராக வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது.

"3 தடவ கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க😅".. கார் வாங்கிய பின் DJ பிளாக்.. சிவாங்கிகிட்ட சொன்ன விஷயம் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sivaangi insta story about dj black buy new car

People looking for online information on DJ Black, Sivaangi Krish will find this news story useful.