Reliable Software
www.garudabazaar.com

Video: "அம்மா, தங்கச்சி கிட்டயும் இப்டி பேசுவாங்களா? எல்லாருக்கும் நடக்குது".. பாடகி பேச்சு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாடகி மாளவிகா சுந்தர் தமது இன்ஸ்டாகிராமில் ஒரு முக்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பகிர்ந்துள்ள மிகவும் சென்சிடிவான விஷயம் பரவி வருகிறது.

Singer Malavika sundar angry over indecent commenters video

அதில், “இந்த நாள் நல்ல நாள் ஆகட்டும் என்று சொல்லி தான் தொடங்க நினைக்கிறேன். ஆனால் அண்மையில் நடந்த ஒரு சம்பவம் அப்படி சொல்வதற்கு என்னை தூண்டவில்லை. சிலர் என்னை பாட்டு பாடச் சொல்லி கேட்கிறீர்கள் மன்னிக்கவும். நான் அந்த மனநிலையிலும் இல்லை. எனக்கு ஒருவர் ஒரு மோசமான கமெண்ட் அனுப்பி இருக்கிறார். சோஷியல் மீடியாவில் இது நிச்சயமாக எல்லாப் பெண்களுக்கும் நடந்திருக்கும். முக்கால்வாசி மட்டுமல்லாமல் பெரும்பாலும் அனைத்துப் பெண்களும் இப்படியான கமெண்டுகளை ஒருவரிடம் இருந்து பெற்றிருக்கக் கூடும். ஸ்முக் என்ற பெயர் கொண்ட இளைஞர் தான் எனக்கு அப்படியான ஒரு கமெண்டை அனுப்பினார்.

இது எனக்கு நிச்சயமாக முதல் முறை அல்ல. அதே சமயம் முதல் முறை பாதித்த அளவுக்கு இந்த முறை இது என்னை பாதிக்கப் போவதும் இல்லை. நான் இதை மனதில் சுமந்து கொள்ளாமல் கடந்து விட்டு அடுத்த நாள் என்னுடைய வேலையை பார்த்துக் கொள்ள தான் போகிறேன். எனினும் இப்படி கமெண்ட்டுகளை பார்க்கும் பொழுது ஒரு மாதிரி வருத்தமாகவே இருக்கிறது. எதற்காக இப்படி கமெண்ட்களை அனுப்புகிறார்கள்? அவர்களின் உள்ளத்துக்குள் என்ன நடக்கிறது? எதனால் இப்படி அனுப்புகிறார்கள் என்கிற கேள்விகள் எழுகிறது. ‌

பலரும் இதை தங்களுடன் தொடர்பு படுத்திக் கொள்ள முடியும். குறிப்பாக சோசியல் மீடியாக்களில் இது நிறைய நிகழ்வது தான். இப்படியான ஐடிகளை பற்றி ரிப்போர்ட் செய்திருப்பதாகவும் பலர் என்னிடம் குறிப்பிடுகிறார்கள். நான் இதை கண்டித்து ஒரு போஸ் போட்ட பிறகு கூட, “அந்த நபர் மன்னித்துவிடுங்கள் அக்கா! இதை நான் செய்யவில்லை.. என் நண்பர் செய்துவிட்டார்!” என்று வந்து மெசேஜ் செய்தார்.

ஆனால் இது என்னை ஏதோ செய்கிறது. எதற்காக இப்படி செய்கிறார்கள் என்று ஆச்சரியப்பட வைக்கிறது. எனக்கு தெரியவில்லை. சோசியல் மீடியாக்களில் நாம் பல அரிய விஷயங்களை, நல்ல விஷயங்களை செய்து வருகிறோம். அவற்றை நம் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் உதவும் வகையில் எப்படி பயன்படுத்த முடியுமா அப்படி பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். மகிழ்ச்சியும் பாசிடிவிட்டியும் நம்மைச் சுற்றி இருப்பதற்காக சோசியல் மீடியாவை பயன்படுத்துகிறோம். இன்னும் பல விஷயங்கள் நம்மை சுற்றி சோசியல் மீடியாக்களில் நடக்கின்றன. அப்படி இருக்கும் பொழுது சில நபர்கள் இப்படி நமக்கு கமெண்டுகளை பதிவிடுவதற்கு என்ன காரணமாக இருக்கும்.

இப்படி அனுப்புகிறவர்களின் வாழ்க்கையிலும் அம்மா, தங்கை என நிறைய பெண்கள் இருப்பார்கள். அவர்களுக்கு எல்லாம் இவர்கள் இப்படி அனுப்புவார்களா? அல்லது யாரேனும் அவர்களுக்கு இப்படி அனுப்பினால் நீங்கள் பொறுத்துக் கொள்வீர்களா அதை எப்படி பார்ப்பீர்கள் நீங்கள் என்பதெல்லாம் கேள்விக்குறி.! இதுபோன்ற பெண்கள் எதிர்கொள்ளும் சம்பவங்களை நெருக்கமான நண்பர்களிடம் மட்டுமே பகிர முடியும். அப்பா அம்மாவிடம் சொல்லலாமா? வேறு யாரிடம் சொல்வது என்பது போன்ற நெருக்கடிகளை சந்திப்பது உண்டு. ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி நாம் ஏற்கனவே கொண்டிருக்கும் மன உறுதியுடன் கூடுதலாக இதுபோன்ற விஷயங்களால் சோர்ந்து விடாமல் இருப்பது முக்கியம்.

ஏனென்றால் நாம் என்ன சொன்னாலும் இது போன்ற ஆட்கள் தொடர்ந்து இதைச் செய்து கொண்டேதான் இருக்கிறார்கள். அவற்றையெல்லாம் நாம் கடக்கும் போது உங்களுக்கு நம்பிக்கையாளர்கள், உங்களை யார் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களோ? அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். உங்களுக்குள்ளேயே இதுபோன்ற விஷயங்களை வைத்துக் கொண்டு அதை பற்றி நினைத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இதுபற்றி நான் போஸ்ட் செய்தவுடன் இதை புறந்தள்ளுங்கள் என்று பலரும் எனக்கு மெசேஜ்களை அனுப்பினார்கள். நிச்சயமாக நான் நிறைய புறந்தள்ளி கடந்துதான் போக வேண்டியது இருக்கிறது. வேறு எதுவும் செய்யவும் முடியாது. ஆனால் எனக்கு தெரிந்த அளவில் இதை சமூக வலைதளத்தில் ஒரு உரையாடலாக முன்வைக்க வேண்டும் என்று நினைத்தேன்.

இப்படியான மெசேஜ்களை அனுப்புபவர்களுக்கு அவ்வளவு தைரியம் இருக்கும் பொழுது, அவ்வளவு துணிச்சல் இருக்கும் பொழுது, இதைப் பற்றி பேசி சோசியல் மீடியாவில் கருத்துக்களை நீங்களும் தயங்காமல் பதிவிட வேண்டும். வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அதுபற்றி குரல் எழுப்ப வேண்டும் என்றே எனக்கு தோன்றுகிறது. இவற்றை பார்க்கும் ஆண்கள், அதுபோன்ற தவறான செய்கைகளை செய்யும் ஆண்களை தேடிப்பிடித்து பாடம் புகட்ட முயலுங்கள். நன்றி பாதுகாத்துக் கொள்ளுங்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார். 

ALSO READ: 'மணமேடையில்' திருமண கோலத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. இணையத்தை அதிரவைக்கும் ஃபோட்டோஸ்!

VIDEO: "அம்மா, தங்கச்சி கிட்டயும் இப்டி பேசுவாங்களா? எல்லாருக்கும் நடக்குது".. பாடகி பேச்சு! வீடியோ

Singer Malavika sundar angry over indecent commenters video

People looking for online information on Instagram, Malavika Sundar, Viral will find this news story useful.