www.garudabazaar.com

"நான் ஆட்டோக்காரன், ஆட்டோக்காரன்.." சிம்புவின் புது கெட்அப்.. வைரலாகும் அசத்தல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆட்டோ டிரைவர் கெட் அப்பில் நடிகர் சிம்பு இருக்கும் வீடியோ, தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

Simbu new look as auto driver gone viral among fans

கடந்த ஆண்டு, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி இருந்த 'மாநாடு' திரைப்படத்தில் நாயகனாக களமிறங்கி இருந்தார் சிம்பு.

டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படம், கடந்த ஆண்டின் சிறந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகவும் மாறி இருந்தது.

அடுத்தடுத்து திரைப்படங்கள்

அது மட்டுமில்லாமல், சுமார் 100 நாட்கள் கடந்து திரையரங்கில் ஓடி, வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு, தொடர்ந்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார் நடிகர் சிம்பு. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், 'வெந்து தணிந்தது காடு' என்னும் திரைப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேலைகளில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கிருஷ்ணா இயக்கத்தில், 'பத்து தல' என்னும் படத்திலும் சிம்பு நடித்து வருகிறார். இந்த படத்தில், அவருடன் கவுதம் கார்த்திக் இணைந்து முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார்.

Simbu new look as auto driver gone viral among fans

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிம்பு என்ட்ரி

இதற்கு அடுத்தபடியாக, கோகுல் இயக்கவுள்ள 'கொரோனா குமார்' திரைப்படத்திலும் நடிக்க சிம்பு ஒப்பந்தமாகி உள்ளார். ஒரு பக்கம், அடுத்தடுத்து திரைப்படங்கள் நடிப்பதில் தீவிரம் காட்டி வரும் சிம்பு, இன்னொரு பக்கம், பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி இருந்தது, மக்கள் மத்தியில் அதிக வரவேற்பினை பெற்றிருந்தது.

பிக்பாஸ் அல்டிமேட்டிலும் நல்ல பெயர்

முன்னதாக, பிக்பாஸ் நிகழ்ச்சிகளை போல, டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பாதியில் விலக, பல்வேறு கட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நடிகர் சிம்பு தொகுத்து வழங்க ஆரம்பித்தார். கமலை போலவே, சிம்புவின் செயல்பாடும் மக்கள் மத்தியில் நல்ல பெயரினை பெற்றிருந்தது.

ஆட்டோ டிரைவராக மாறிய சிம்பு

தற்போது, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் முடிவடைந்த நிலையில், மீண்டும் திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. அந்த வகையில், தற்போது ஆட்டோ டிரைவர் வேடத்தில் அவர் இருக்கும் வீடியோ ஒன்று, தற்போது வெளியாகியுள்ளது.

Simbu new look as auto driver gone viral among fans

ஆட்டோ ஓட்டுநர் போல உடை அணிந்து காணப்படும் சிம்பு, ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து கொள்வது, அதில் அமர்ந்து கொள்வது என செம மாஸாக சிம்பு இருக்கிறார். இது திரைப்படமா அல்லது ஏதேனும் விளம்பரமா என்பது சரிவர தெரியவில்லை. இருந்த போதும், இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Video Link : https://youtube.com/shorts/OD7ZJoArerA?feature=share

தொடர்புடைய இணைப்புகள்

Simbu new look as auto driver gone viral among fans

People looking for online information on சிம்பு, சிலம்பரசன், Silambarasan TR, Simbu Auto Driver, Simbu New Getup will find this news story useful.