www.garudabazaar.com

கணவருடன் சேர்ந்து கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பிரபல நடிகை..வாழ்த்து மழையில் தம்பதியர்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பெங்களூர்: பிரபல நடிகை தனது கணவருடன் இணைந்து சமூக வலைத்தளங்களில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார்.

Pranitha Subhash Announce Her Pregnancy image went viral on instagram

இந்த 'வலிமை' பட பிரபலம் AK61 படத்திலயும் இருக்காரா? வைரலான செம்ம இன்ஸ்டாகிராம் போஸ்ட்!

தென்னிந்திய நடிகைகளில் முக்கிய நடிகை பிரனிதா சுபாஷ். தமிழ், கன்னட, தெலுங்கு மொழி படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.

குறிப்பாக தமிழில் கடந்த 2011ஆம் ஆண்டு  அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  நடிகை பிரனீதா சுபாஷ் அறிமுகமானார்.

Pranitha Subhash Announce Her Pregnancy image went viral on instagram

அதன் பின்னர் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘சகுனி’ படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்‌. சூர்யா நடிப்பில் மாஸ் படத்தில்  நடித்து இருந்தார். அந்த படத்தின் பாடலால் மிகவும் பெயர் பெற்றார்.

Pranitha Subhash Announce Her Pregnancy image went viral on instagram

பின்னர் அதர்வா  நடிப்பில்  வெளியான ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் நடித்திருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் நித்தின் ராஜ் என்பவரை ப்ரணிதா சுபாஷ் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு பாலிவுட்டில் ப்ரணிதா   நடித்த ஹங்காமா 2 மற்றும் புஜ்- தி ப்ரைட் ஆஃப் இந்தியா ஆகிய திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளிவந்தன.

Pranitha Subhash Announce Her Pregnancy image went viral on instagram

இந்நிலையில்  தான் கர்ப்பமாக இருப்பதாக நடிகை ப்ரணிதா அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், “கணவரின் 34வது பிறந்தநாளில் மேலிருந்து தேவதைகள் எங்களுக்கு பரிசு அளித்துள்ளனர்" என கூறி கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்யும் புகைப்படத்தையும் கணவருடன் இணைந்து பதிவிட்டுள்ளார்.

Pranitha Subhash Announce Her Pregnancy image went viral on instagram

புதிய படத்தில் தனுசுக்கு ஹீரோயினான வெளிநாட்டு நடிகை.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

Pranitha Subhash Announce Her Pregnancy image went viral on instagram

People looking for online information on Pranitha Subhash, Pregnancy image, Saguni, Udhayan will find this news story useful.