www.garudabazaar.com

தெறிக்கவிடும் புது லுக்கில் சிலம்பரசன்.. ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் LATEST போட்டோஷூட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிம்புவின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவி வருகின்றன.

Silambarasan TR New Look Photoshoot Photos went viral

மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படம் வெளியாகி உள்ளது.

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவானது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிந்தார்.

கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் பத்து தல படம் வெளியானது. இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் தொலைக்காட்சியும், ஓடிடி உரிமத்தை பிரபல அமேசான் பிரைம் வீடியோ தளமும் கைப்பற்றி உள்ளது.

பத்து தல படத்தினை அடுத்து சிம்பு நடிக்கும் புதிய படத்தினை கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளது.  கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இந்த படத்தினை இயக்க உள்ளார்.

இந்நிலையில் நடிகர் சிம்பு, புது லுக்கில் நீண்ட முடியுடன் கோட் சூட் அணிந்து நவநாகரீக தோற்றத்தில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பிரபல போட்டோ கிராபர் சுதர்சன் எடுத்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan TR New Look Photoshoot Photos went viral

People looking for online information on Silambarasan TR will find this news story useful.