www.garudabazaar.com

மோடியை குறிப்பிட்டு சித்தார்த் சொன்னத பாருங்க.. வாக்கு எண்ணிக்கை நடுவே வைரல் ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சித்தார்த் அண்மை காலமாகவே அரசியல் சார்ந்த பரபரப்பு கருத்துக்களை தமது ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தி வருகிறார். 

Siddharth viral tweet mentioning modi amid Election2021

அந்த வகையில் ஆக்ஸிஜன் இருப்பு தொடர்பான உத்தரப் பிரதேச முதல்வரின் கருத்துக்களை விமர்சித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தனக்கு மிரட்டல்கள் வருவதாகவும் குறிப்பிட்டிருந்த அவர் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுவதை குறிப்பிட்டு நன்றி சொன்னவர், போலீஸ் அதிகாரிகள் கொரோனா சூழலில் மக்களுக்கு சேவையை அளிக்கட்டும் எனக்கூறி தனக்கு பாதுகாப்பு வேண்டாம் என்று கூறிவிட்டார். 

இந்நிலையில் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. குறிப்பாக மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசும், அசாமில் பாஜகவும் முன்னிலை வகிக்கின்றன. மேற்கு வங்கத்தில் பாஜக 2-ஆம் இடத்தில் உள்ளது. 

நடப்பு தேர்தல் வாக்குகள் மற்றும் முன்னிலை நிலவரம் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் இந்த நிலையில், நடிகர் சித்தார்த் தமது ட்விட்டர் பக்கத்தில் “மோடி... ஓ... மோடி” என பதிவிட்டுள்ளார். அவரது இந்த ட்வீட் வைரலாகி வருகிறது. 

ALSO READ: முதல் ரவுண்ட்லயே #முன்னிலை... முதல் தேர்தலிலேயே மாஸ் காட்டும் நடிகர் உதயநிதி ஸ்டாலின்!

Tags : Siddharth, Modi

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Siddharth viral tweet mentioning modi amid Election2021

People looking for online information on Modi, Siddharth will find this news story useful.