www.garudabazaar.com

Video: “ஐயா...”.. ஒரு வழியாக சென்னையில் பிரதமர் மோடியிடமும் அப்டேட் கேட்ட அஜித் ரசிர்கள்.. வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அண்மைக்காலமாகவே அஜித் ரசிகர்கள் வலிமை பட தொடர்பான அப்டேட்டுக்காக ஏங்கி வருகின்றனர்.

அஜித் ரசிகர்கள் வலிமை மோடி Ajith Fans Valimai Update PM Modi

நீண்ட மாதங்கள் கழித்து வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் ஒரு சண்டைக்காட்சியை தவிர ஏனைய காட்சிகள் வலிமை படத்தில் படமாக்கப்பட்டுவிட்டதாகவும், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கவிருப்பதாகவும் ஒரு நேர்காணலின்போது தகவல் அளித்தார்.  அஜித் ரசிகர்கள் சிலர் இதனால் சற்றே நிம்மதி அடைந்திருந்தாலும் இன்னும் ஏக்கம் தீராதா அஜித் ரசிகர்கள் பலரும் வலிமை தொடர்பான அப்டேட்டை தொடர்ந்து கேட்டுக் கொண்டே வருகின்றனர்.

அஜித் ரசிகர்கள் வலிமை மோடி Ajith Fans Valimai Update PM Modi

அதன் ஒரு பகுதியாக நேற்றைய தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் வீரர் மொய்தீன் அலியிடம் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் கேட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகியது. இதனிடையே சட்டமன்ற தேர்தலை தமிழகம் எதிர்கொள்ள இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் சென்னை வந்திருந்தார். நேற்று காலை 10.30 மணி அளவில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடி நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அவர் வரும் வழியில் சாலையோரத்தில் பதாகை ஏந்தி நின்ற அஜித் ரசிகர்கள் சிலர், “அய்யா.. வலிமை அப்டேட் வேணும்யா” என கோரஸாக குரல் கொடுத்தனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

தொடர்புடைய இணைப்புகள்

அஜித் ரசிகர்கள் வலிமை மோடி Ajith Fans Valimai Update PM Modi

People looking for online information on Ajith fans, அஜித், மோடி, ரசிகர்கள், வலிமை, Chennai, Modi, ValimaiUpdate will find this news story useful.