சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராகும் மணிரத்னத்தின் 'வானம் கொட்டட்டும்' பாடல் குறித்த தகவல்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 15, 2019 09:59 PM
மெட்ராஸ் டாக்கீஸ் சார்பாக இயக்குநர் மணிரத்னம் கதை எழுதி தயாரித்து வரும் படம் 'வானம் கொட்டட்டும்'. இந்த படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ரம் பிரபுவிற்கு தங்கையாக நடித்துள்ளார். இந்த படத்தை தனசேகரன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே படைவீரன் என்ற படத்தை இயக்கியிருந்தார்.
மேலும் இந்த படத்தில் நடிகர் சாந்தனு, ராதிகா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்நிலையில் பாடகி சக்தி ஸ்ரீகோபாலன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சித் ஸ்ரீராமுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், ''வானம் கொட்டட்டும்' படத்தின் முதல் பாடல் தற்போது பதிவு செய்யப்பட்டது. சித் ஸ்ரீராம் இசையமைத்த அழகான பாடலை பாடியதில் மகிழ்ச்சி. நீங்கள் கேட்பதற்காக நான் காத்திருக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.