கமலின் தென்பாண்டி சீமையிலே.. இந்த வெர்ஷனில் கேட்டிருக்கீங்களா.?! - அசத்தும் ஷ்ருதி ஹாசன்.
முகப்பு > சினிமா செய்திகள்கமல் படத்தின் பாடலை அவரது மகள் ஷ்ருதி ஹாசன் பாடியுள்ள வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.

1987-ல் கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் நாயகன். கமல், சரண்யா, நாசர் உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்தார். அவரின் பாடல்கள் எல்லாம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக படத்தில் வரும் தென்பாண்டி சீமையிலே பாடல் பலருக்கு ஃபேவரைட்டாக இருக்கிறது.
இந்நிலையில் கமலின் மகளும் நடிகையுமான ஷ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். தென்பாண்டி சீமையிலே பாடலை தன் ஸ்டைலில் அவர் பாடியுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார். நடிப்பது மட்டுமின்றி இசையிலும் ஆர்வம் காட்டி வரும் ஷ்ருதி ஹாசன், வெஸ்டர்ன் ஸ்டைலில் நாயகன் பட பாடலை பாடி அசத்தியிருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் இப்பாடல் எப்போதுமே அவர் விரும்பும் பாடல் என குறிப்பிட்டுள்ளார்.