'என் கல்யாணத்துக்கு நீங்க தான் காரணம்' - மாஸ்டர் நடிகர் சொல்லும் மேரேஜ் சீக்ரட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சாந்தனு ட்விட்டரில் தனது பெற்றோரின் திருமண நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

shanthanu wishes bhagyaraj and poornima on their anniversary

நடிகரும் இயக்குநருமான பாக்யராஜின் மகன் சாந்தனு. இவர் தமிழ் சினிமாவின் இளம் கதாநாயகனாக வலம் வருகிறார். சிறுவயதில் அப்பா பாக்யராஜின் படங்களில் தலைகாட்டிய இவர், இப்போது விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள வானம் கொட்டட்டும் படத்திலும் இவர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பெற்றோரின் திருமண நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த தனது பதிவில், 'நல்ல மற்றும் கெட்ட காலங்களில் உங்களது 36 வருட ஒற்றுமை எனக்கு காதல் மீதான நம்பிக்கையையும் திருமணத்தின் மீதான நம்பிக்கையையும் தருகிறது. ஒவ்வொரு குழந்தையும் வேண்டும் என்று விரும்பும் பெற்றோர் நீங்கள். கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும். உங்களை மிகவும் அதிகமாக நேசிக்கிறேன்' என அவர் பதிவிட்டுள்ளார்.

Entertainment sub editor