www.garudabazaar.com

சந்தானம் நடிக்கும் AGENT கண்ணாயிரம்! பெர்த்டே ட்ரீட்டாக வெளியான த்ரில்லான டீசர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நடிகர் சந்தானம் இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

shanthanam Starring agent kannayiram movie teaser released

சந்தானம் நடிப்பில் கடைசியாக  ஜீ5  ஒடிடியில் டிக்கிலோனா படம் செப்டம்பர் 10 அன்றும், சபாபதி படம் திரையரங்குகளில் நவம்பர் 19 அன்றும் வெளியானது. இந்த படங்களைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு ஸ்வரூப் ஆர்.எஸ்.ஜே இயக்கத்தில் நவீன் பொலிச்செட்டி, ஸ்ருதி ஷர்மா நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் 'ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாஸ ஆத்ரேயா' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார். இந்த படம் தெலுங்கில் 5 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு 20 கோடி ரூபாய் வசூல் செய்தது.

shanthanam Starring agent kannayiram movie teaser released

வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய இயக்குநர் மனோஜ் பீதா இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிக்கும் இந்த படத்தின் தமிழ் ரீமேக் கடந்த பிப்ரவரி மாதம் கோயம்புத்தூரில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டு (27.08.2021) அன்றுடன்  நிறைவு பெற்றது.

shanthanam Starring agent kannayiram movie teaser released

யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக ரியா சுமன் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஏஜண்ட் கண்ணாயிரம் என பெயர் வைக்கப்பட்டது. படத்தின் முதல் பார்வை போஸ்டரும் சில நாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது.  இந்நிலையில் சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. 

shanthanam Starring agent kannayiram movie teaser released

டிடெக்டிவ்வாக சந்தானம் நடித்துள்ளார். ஒரு தனியார் துப்பறியும் நபர், தனது சொந்த ஏஜென்சியை நடத்துகிறார், அவரது உதவியாளரின் உதவியுடன் சிறிய வழக்குகளை தீர்க்கிறார். இருப்பினும், ஒரு தந்தை தனது மகளின் கொலையை விசாரிக்க வேண்டும் என்று வரும் போது அடுத்து என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை. இதனை காமெடி திரில்லராக கொடுத்துள்ளனர்.

சந்தானம் நடிக்கும் AGENT கண்ணாயிரம்! பெர்த்டே ட்ரீட்டாக வெளியான த்ரில்லான டீசர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

shanthanam Starring agent kannayiram movie teaser released

People looking for online information on Agent Kannayiram, Manoj Beedha, Riya Suman, Shanthanam, Shanthanam Birthday, Trailer, Yuvan Shankar Raja will find this news story useful.